அருள்வாக்கு இன்று ++ arulvakku-20

ஆகஸ்ட், 20 - திங்கள்
இன்றைய நற்செய்தி:

மத்தேயு 19:16-22

“ “நிறைவுள்ளவராக விரும்பினால் நீர் போய், உம் உடைமைகளை விற்று ஏழைகளுக்குக் கொடும். "

அருள்மொழி:

அதற்கு இயேசு, “நிறைவுள்ளவராக விரும்பினால் நீர் போய், உம் உடைமைகளை விற்று ஏழைகளுக்குக் கொடும். அப்பொழுது விண்ணகத்தில் நீர் செல்வராய் இருப்பீர். பின்பு வந்து என்னைப் பின்பற்றும்” என்றார்
மத்தேயு 19:21

வார்த்தை வாழ்வாக:

மத்தேயு நற்செய்தியாளர் மட்டும் செல்வரான இளைஞர் எனக் கூறுகிறார். இந்த இளைஞருக்கு ஏராளமான சொத்துக்கள் இருந்தது. மன அமைதிக்கும், மகிழ்ச்சிக்கும், நிம்மதியான வாழ்வுக்கும், செல்வம் ஒரு தடையாய் இருந்தால், அச்செல்வத்தினால் வரும் பயனென்ன? மனமுவந்து கொடுப்பதில்தான் மகிழ்ச்சி என்பதை உணர்வோம். யூதரல்லாத அடுத்தவருக்கு வட்டிக்குக் கொடுப்பதோ அவர்களை அடிமைகளாக ஒடுக்குவதோ தவறல்ல என்று யூதர்கள் கருதினர் அக்காலத்தில்.

சுயஆய்வு :

  1. பெறுவதில் மகிழ்ச்சியா?
  2. இழப்பதில் மகிழ்ச்சியா?

இறை வேண்டல்:

வாழ்வின் இறைவா! இருப்பதை இல்லாதவருக்கு ஈந்து இன்புற்று வாழ வரம் தாரும்.


www.anbinmadal.org