அருள்வாக்கு இன்று ++ arulvakku-19

ஆகஸ்ட், 19 - ஞாயிறு
இன்றைய நற்செய்தி:

யோவான் 6:51-58

"வாழ்வு தரும் உணவு நானே.”

அருள்மொழி:

இயேசு, "விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த வாழ்வு தரும் உணவு நானே.”.
யோவான் 6:51

வார்த்தை வாழ்வாக:

நாம் அன்றாடம் உண்ணும் உணவு, நம்முடைய உடலில் புதுத் தெம்பையும், புத்துணர்ச்சியையும் தருகிறது. ஆன்மாவின் உணவிற்கு? இயேசுவின் உடலையும், இரத்தத்தையும் உண்ணும்போது அவரது அனைத்து இயல்பிலும் பங்கு பெறுகிறோம். கிறிஸ்துவின் திருவிருந்தில் முன்தயாரிப்பு இன்றி, பக்தி இன்றி பங்கெடுப்பதைத் தவிர்ப்போம். நிலையான ஆன்மாவை வளர்க்கும் வானக உணவை நாம் ஆவலுடன், ஆர்வமுடன், பற்றுறுதியுடன் பெறுவோம்.

சுயஆய்வு :

  1. உள்ளத்தில் பக்தி இல்லாமல், நமது உடையையும் நடையையும் அனைவரும் பார்க்க வேண்டும் என்பதற்காக நாவினால் நற்கருணையை வாங்குகிறோமா? சிந்திப்போம்.

இறை வேண்டல்:

வாழ்வு தரும் உணவே எம் இறைவா! எங்கள் வாழ்வு, இயேசுவோடு இணைந்து வாழும் வரம் தாரும்.


www.anbinmadal.org