அருள்வாக்கு இன்று ++ arulvakku-18

ஆகஸ்ட், 18 - சனி
இன்றைய நற்செய்தி:

மத்தேயு 19:13-15

"“சிறு பிள்ளைகளை என்னிடம் வரவிடுங்கள்;”

அருள்மொழி:

ஆனால் இயேசு, “சிறு பிள்ளைகளை என்னிடம் வரவிடுங்கள்; அவர்களைத் தடுக்காதீர்கள்; ஏனெனில் விண்ணரசு இத்தகையோருக்கே உரியது” என்றார்.
மத்தேயு 19:14

வார்த்தை வாழ்வாக:

விண்ணரசு சிறு பிள்ளைகளுடையது. விண்ணகத்தில் எப்போதும் ஆடலும், பாடலுமாகத்தான் இருக்கும். அதேபோல, குழந்தைகள் இருக்குமிடம் எப்போதும் குதூகலமாகத்தான் இருக்கும். குழந்தை வரம் என்பது, இறைவன் தரும் அரும்பெரும் வரம். வரம் பெற்றுவிட்டால் மட்டும் போதாது. அவற்றைப் பேணவும் வேண்டும். இறையரசு, குழந்தைத் தன்மையுடையோருக்கே உரியது. பெரியவர்கள் விண்ணரசினுள் நுழைய வேண்டுமென்றால், சிறுவர்களைப் போல் தங்கள் உள்ளத்தை மாற்ற வேண்டும். குழந்தையிடம் ஆச்சரிய உணர்வும், பிறரை நம்பும் தன்மையும், எளிதில் மன்னிக்கும் குணமும் உண்டு. நாமும் பெறுவோம், இறையரசில் நுழைவோம்.

சுயஆய்வு :

  1. ஆலயங்களுக்குச் செல்லும்போது, நம்முடைய குழந்தைகளை அழைத்துச் செல்கிறோமா?

இறை வேண்டல்:

வாழ்வின் இறைவா! இயேசுவின் அன்பு உள்ளத்தில் குழந்தைகளுக்கு ஒரு தனி இடம் உள்ளது போல், பெரியவர்களும் குழந்தை உள்ளம் பெற்று வாழ வரம் தாரும்.


www.anbinmadal.org