அருள்வாக்கு இன்று ++ arulvakku-17

ஆகஸ்ட், 17 - வெள்ளி
இன்றைய நற்செய்தி:

மத் 19:3-12

“கடவுள் இணைத்ததை மனிதர் பிரிக்காதிருக்கட்டும்"

அருள்மொழி:

இனி அவர்கள் இருவர் அல்ல; ஒரே உடல். எனவே கடவுள் இணைத்ததை மனிதர் பிரிக்காதிருக்கட்டும்.”
மத்தேயு 19:6

வார்த்தை வாழ்வாக:

ஏழு அருட்சாதனங்களுள் ஒன்று திருமணம். மற்ற அருட்சாதனங்களிலெல்லாம் எந்த மாற்றமும் செய்வதில்லை. ஆனால், திருமணம் என்ற அருட்சாதனத்தை மட்டும் மனிதன் மாற்றிக் கொள்கிறான். விவாகரத்து என்பது இன்று சாதாரண நிகழ்வாக மாறிவிட்டது. "பிடிக்கவில்லை' என்ற ஒரு வார்த்தை, கணவன் - மனைவி என்ற முழு வாழ்வையே அஸ்தமனமாக்கி விடுகிறது. அருட்சாதனத்தின் புனிதம் என்ன? என்பது கேள்வியாக அமைகிறது.

சுயஆய்வு :

  1. கணவன் - மனைவி உறவை விலக்கி விடுவது முறையா?

இறை வேண்டல்:

வாழ்வின் இறைவா! தாய் தந்தை உறவு சிறு காலமே. கணவன் - மனைவி உறவு முழுக்காலமே என்பதை உணர வரம் தாரும்.


www.anbinmadal.org