அருள்வாக்கு இன்று++arulvakku-16

ஆகஸ்ட், 16 - வியாழன்
இன்றைய நற்செய்தி:

மத்தேயு 18:21- 19:1

“உங்களுள் ஒவ்வொருவரும் தம் சகோதரர் சகோதரிகளை மன்னியா விட்டால், என் தந்தையும் உங்களை மன்னிக்க மாட்டார்.”

அருள்மொழி :

இயேசு, “உங்களுள் ஒவ்வொருவரும் தம் சகோதரர் சகோதரிகளை மன்னியா விட்டால், விண்ணுலகில் இருக்கும் என் தந்தையும் உங்களை மன்னிக்க மாட்டார்.”
மத்தேயு 18:35

வார்த்தை வாழ்வாக:

மன்னிப்புக் கொடுப்பவரை விட, மன்னிப்புக் கேட்பவர் மிகப் பெரியவர் என்பார்கள். ஒருவன் உண்மையிலேயே மனம் மாற ஆசைப்பட்டால், அவன் தன் தவறுகளுக்காக முதலில் வருந்தி மன்னிப்புக் கேட்க வேண்டும். தன்னை அறியாமலே தவறுகள் செய்யும்போது ஏழு முறை அல்ல, எழுபது தடவை கூட ஏழு முறை மன்னிக்கலாம். மன்னிக்கவும் வேண்டும்,

சுயஆய்வு:

  1. எழுபது தடவை ஏழு முறை, அறியாமல் தவறு செய்தவர்களை மன்னிக்கத் தயாரா?

இறை வேண்டல்:

வாழ்வின் இறைவா! மனம் மாறவும், மன்னிக்கவும் உள்ளத்தின் ஆற்றலை வரமாகத் தாரும்.


www.anbinmadal.org