அருள்வாக்கு-13

ஆகஸ்ட், 13 - திங்கள்
இன்றைய அருள்வாக்கு

மத்தேயு. 18:1-5, 10-14

“சிறியோருள் ஒருவர் கூட நெறி தவறிப் போகக்கூடாது”

அருள்மொழி :

"சிறியோருள் ஒருவர் கூட நெறி தவறிப் போகக்கூடாது என்பதே உங்கள் விண்ணகத் தந்தையின் திருவுளம்."
மத்தேயு 18:1-5, 10-14

வார்த்தை வாழ்வாக:

இயேசு, விண்ணரசின் அங்கத்தினர்களாக இருக்க, குழந்தையைப் போலத் தூய உள்ளம், அகந்தையின்மை, தாழ்ச்சி, சார்ந்து வாழும் குணம் போன்றவற்றைக் கொண்டிருக்க அழைப்பு விடுக்கின்றார் இன்றைய நற்செய்தியில், சிறு பிள்ளைகள் கடவுளையே சார்ந்து, அவரையே முற்றிலும் நம்பி வாழ்வார்கள். வழி தவறி அலையும் ஆடுகள், சமுதாயத்தால் நசுக்கப்படுகிறார்கள். பச்சிளம் பிள்ளைக்குக் கூட பாலியல் கொடுமை நடக்கிறது. இதுதான் நவீன உலகமா? இதுதான் புரட்சியா? இப்படிப்பட்ட சிறு பிள்ளைகளைத்தான் இறைவன், விண்ணரசில் மிகப் பெரியவர்கள் என்கிறார்.

சுயஆய்வு:

சிறு பிள்ளைகளுக்கு இந்தச் சமுதாயம் இடையூறாக உள்ளதா? நாம் ஒவ்வொருவரும் இவர்களை எப்படி நடத்துகிறோம்?

இறைவேண்டல்:

வாழ்வின் இறைவா! பாவிகளாகிய நாங்கள், சிறு பிள்ளைகளின் கொடுமைகளைத் தட்டிக் கேட்கக்கூடிய ஆற்றலை வரமாகத் தாரும்..


www.anbinmadal.org