அருள்வாக்கு-12

ஆகஸ்ட், 12 - ஞாயிறு
இன்றைய நற்செய்தி

யோ 6:41-51

"விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த உணவு நானே”

அருள்மொழி :

"விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த உணவு நானே” என்று இயேசு கூறினார்.

வார்த்தை வாழ்வாக

அனுதினமும் புசிக்கும் உணவு, அனைவருக்கும் தெரிந்த உணவு. மனித உழைப்பால் அடையும் இந்த உணவு, உடல் வளர்ச்சிக்கு உதவுகிறது. பழைய ஏற்பாட்டில் இஸ்ரயேல் மக்கள் உண்ட உணவு மன்னா. 'அது என்ன?' என்று தெரியாமலேயே அதை அவர்கள் உண்டு வந்தனர். பாலைவனப் பசியைப் போக்க இறைவன் தந்த அப்பம் இதுவே. நமது வாழ்வில் சரியானவை, உண்மையானவை எங்கிருந்து, எவரிடமிருந்து வந்தாலும், அதை ஏற்றுக் கொள்ளக்கூடிய மனப்பக்குவமும், உண்மைக்குப் புறம்பானவற்றைப் புறந்தள்ளக்கூடிய துணிச்சலும் இருந்தால், முணுமுணுக்க வேண்டிய அவசியமே இல்லை.

சுயஆய்வு:

  1. நிலைவாழ்வடைய நாம் உட்கொள்ளக்கூடிய ஆன்மீக உணவு எது?

இறைவேண்டல்:

வாழ்வின் இறைவா! நிலைவாழ்வு பெற, உயிருள்ள உணவை உட்கொண்டு சிறக்க வரம் தாரும்.


www.anbinmadal.org