= arulvakku-11

ஆகஸ்ட், 11 - சனி
இன்றைய நற்செய்தி:

மத் 17:14-20

“அதை ஏன் எங்களால் ஓட்ட இயலவில்லை”

அருள்மொழி :

சீடர்கள், “அதை ஏன் எங்களால் ஓட்ட இயலவில்லை” என்று கேட்டார்கள்.
மத்தேயு 17:

வார்த்தை வாழ்வாக:

நற்செய்தியில் சுட்டிக் காட்டப்படும் 'நம்பிக்கையின்மை' என்னவென்று புரிந்து கொள்வது இன்றியமையாதது. “அதை ஏன் எங்களால் ஓட்ட இயலவில்லை ?” என்று கேட்டார்கள். இயேசு அவர்களைப் பார்த்து, “உங்கள் நம்பிக்கைக் குறைவுதான் காரணம்” என்றார், இயேசு, “நம்பிக்கையோடு ஒருவர் ஒரு மலையையும் இடம் பெயரச் செய்யலாம்” என்கிறார். தன்னம்பிக்கையும், விடாமுயற்சியும் இருந்தால் மட்டும் எதையும் செய்துவிட முடியும் என நினைக்கக் கூடாது. இறைநம்பிக்கையும் அவசியம் என்பதைச் சீடர்களுடன் சேர்ந்து நாமும் உணர்வோம்.

சுயஆய்வு :

  1. தன்னம்பிக்கையும், விடாமுயற்சியும் மட்டும் இருந்தால், எல்லாவற்றையும் வெற்றியடைய முடியுமா?

இறை வேண்டல்:

வாழ்வின் இறைவா! இறைநம்பிக்கையோடு இணைந்த தன்னம்பிக்கையில் வெற்றி பெற வரம் தாரும்.


www.anbinmadal.org