arulvakku-10

ஆகஸ்ட், 10 - வெள்ளி
இன்றைய நற்செய்தி:

யோவான் 12:24-26

"அறுவடையோ மிகுதி. வேலையாட்களோ குறைவு."

அருள்மொழி :

இயேசு, “கோதுமை மணி மண்ணில் விழுந்து மடியாவிட்டால், அது அப்படியே இருக்கும்” என்றார்..
யோவான் 12:24-26

வார்த்தை வாழ்வாக:

சின்ன ஒரு விதை பெரிய விருட்சமாக வெளிவருகிறது. ஒன்றை இழக்கும்போது மற்றொன்று உருவெடுக்கிறது. பசுமையான விதை காய்ந்து கருகி தன்னை அழித்து முளையை விடுகிறது, விருட்சமான மரமாக மாறுகிறது. அதே போல்தான் மண்ணில் மறைந்த மறைசாட்சிகள், இன்று ஆல்போல் படர்ந்திருக்கும் திருச்சபைக்கு வித்தாக அமைந்துள்ளனர். நம் வாழ்விலும் இயேசுவுக்கென்று ஒரு சில வேளைகளில் சில மணித்துளிகளை ஒதுக்கி, திருச்சபை வளர விதையாவோம்.

சுயஆய்வு :

  1. புது வாழ்வளித்த இயேசுவைப் போல் நீ உடைபடத் தயாரா? மடியத் தயாரா?

இறை வேண்டல்:

வாழ்வின் இறைவா! திருச்சபை வளர என்னையே உடைபட, உருமாற, உயர்ந்து நிற்க வரம் தாரும்,


www.anbinmadal.org