அருள்வாக்கு இன்று | arulvakku-7

அன்பின்மடல்

ஆகஸ்ட், 8 - புதன்
இன்றைய நற்செய்தி:

மத் 15 : 21-28

"பிள்ளைகளுக்குரிய உணவை எடுத்து நாய்க்குட்டிகளுக்குப் போடுவது முறையல்ல''

அருள்மொழி :

அவர் மறுமொழியாக, “பிள்ளைகளுக்குரிய உணவை எடுத்து நாய்க் குட்டிகளுக்குப் போடுவது முறையல்ல” என்றார்.
மத் 15 : 26

வார்த்தை வாழ்வாக:

இன்றைய நற்செய்தியில், எந்த யூதனும் தன்னைப் பின் தொடர முடியாத ஓர் இடத்திற்குச் செல்கிறார் இயேசு. தீட்டுப் பற்றிய சடங்குகள் தவறெனில், யூதர் மட்டுமே கடவுளின் பிள்ளைகள், ஏனையோர் நாய்க்குச் சமமானவர்கள் என்ற யூதரின் சிந்தனையும் தவறே. உடலில் விருத்தசேதனம் பெற்று, வீண் சடங்குகளை முக்கியப்படுத்தி, இதயத்தில் கடவுளுக்குத் தூரமானவர்கள் எனக் கருதப்பட்ட யூதர்களையா ஆண்டவர் பிள்ளைகள் என்கிறார்? யூதர்களுக்கென வந்த மெசியா அரசு, ஏன் யூதர்களின் கை நழுவி, பிற இனத்தாரிடம் வந்து தங்கியது என்பதற்கும் இவ்வுவமை ஒரு காரணத்தைத் தருகிறது.

சுயஆய்வு :

  1. வாழ்வில் பணமும், பட்டமும், பதவியும் வந்து சேரும்போது... என்னை நீங்கள் யாரென்று சொல்கிறீர்கள்?
  2. வாழ்வில் துன்பமும், துயரமும், வேதனையும், சோதனையும் குறுக்கிடும்போது... என்னை நீங்கள் யாரென்று சொல்கிறீர்கள்?

இறை வேண்டல்:

வாழ்வின் இறைவா! மன சிரத்தைத் தாழ்த்தி, சிறந்த வாழ்வு வாழ வரம் தாரும்.


www.anbinmadal.org