அருள்வாக்கு இன்று | arulvakku-7

அன்பின்மடல்

ஆகஸ்ட், 7- செவ்வாய்
இன்றைய நற்செய்தி:

மத்தேயு15: 1-2, 10-14

"மணமகன் அவர்களை விட்டுப் பிரியும் காலம் வரும். அப்போது நோன்பு இருப்பர்."

அருள்மொழி :

அதற்கு இயேசு அவர்களை நோக்கி, "மணமகன் தங்களோடு இருக்கும்வரை மணவிருந்தினர்கள் துக்கம் கொண்டாட முடியுமா? மணமகன் அவர்களை விட்டுப் பிரியவேண்டிய காலம் வரும். அப்போது அவர்களும் நோன்பு இருப்பார்கள்.
மத்தேயு 9:15

வார்த்தை வாழ்வாக:

இன்றைய நற்செய்தியில், இயேசு, நோன்பு பற்றிய பரிசேயர்களின் கேள்விகளுக்குச் சாட்டையடி கொடுக்கின்றார். இறைமகனின் உடனிருப்பை சீடர்கள் தினமும் உணர்ந்தவர்களாய் இருக்கும் நிலையில், அவர்கள் ஏன் நோன்பு இருக்க வேண்டும் என்பதைத்தான் இயேசு, “மணமகன் தங்களோடு இருக்கும் வரை மணவிருந்தினர்கள் துக்கம் கொண்டாட முடியுமா? ஒரு நாள் மணமகன் அவர்களை விட்டுத் தந்தையிடம் செல்லும் காலம் வரும். அப்போது அவர்கள் நோன்பு இருப்பார்கள்” என்று தனது பாடுகள் - இறப்பு - உயிர்ப்பு ஆகிய நிலைகளை இங்கே பதிவு செய்கின்றார். ஆம் இறைகுலமே, நாம் அனைவரும் குறிப்பிட்ட காலத்தில் செப் தவம் முயற்சிகளில் ஈடுபட்டு, தான தர்மங்களில் ஏழை எளியோருக்கு உதவும் மனநிலையைப் பெற்று வாழ வேண்டும்.

சுயஆய்வு :

  1. மணமகனை அறிகிறேனா?
  2. அவரது உடனிருப்பை உணர எனது முயற்சி யாது?

இறை வேண்டல்:

அன்பு இயேசுவே, நாளும் உமது உடனிருப்பில் வாழும் வரம் தாரும். ஆமென்.


www.anbinmadal.org