அருள்வாக்கு இன்று | arulvakku-5

ஆகஸ்ட், 5 - ஞாயிறு
இன்றைய நற்செய்தி:

யோவான் 6:24-35

“அழிந்து போகும் உணவுக்காக உழைக்க வேண்டாம். நிறைவாழ்வு தரும் அழியாத உணவுக்காகவே உழையுங்கள்.”

அருள்மொழி:

இயேசு, "வாழ்வு தரும் உணவு நானே. என்னிடம் வருபவருக்குப் பசியே இராது. என்னிடம் நம்பிக்கை கொண்டிருப்பவருக்கு என்றுமே தாகம் இராது” என்றார்.

வார்த்தை வாழ்வாக:

இயேசு தரும் உணவின் சிறப்பு: இயேசுவே அந்த உணவு, இது வானிலிருந்து இறங்கி வந்த உணவு, இது பசி தராத உணவு, இது நிலைவாழ்வு தரும் உணவு. இயேசு பெத்லகேம் - அப்பத்தின் வீடு - தீவனத் தொட்டி - உணவளிக்கும் இடம் போன்றவற்றைத் தனது பிறப்பிடமாகத் தேர்வு செய்து, தானே வாழ்வு தரும் உணவு என அறிமுகம் செய்கிறார். கடைசி இரவு உணவின்போது, “இது எனது உடல்” எனக் கூறித் தன்னையே உணவாகத் தந்தார். இறுதியாகச் சிலுவையில் இரத்தம் சிந்தித் தன்னையே முழுமையாகத் தரணிக்குத் தந்தார் நம் இயேசு.

சுயஆய்வு:

  1. நவீன உலகில், இயேசுவிடம் அதிசயங்களைக் கண்டதால் தேடுகிறோமா? அற்புதங்கள் புரியாததால் ஓடுகிறோமா?

இறை வேண்டல்:

வாழ்வின் இறைவா! நாங்கள் என்றும் உம்மை உண்டு வாழ எங்களுக்கு வரம் தாரும்..


www.anbinmadal.org