அருள்வாக்கு இன்று | arulvakku-3

ஆகஸ்ட், 3 - வெள்ளி
இன்றைய நற்செய்தி

மத்தேயு13:54-58

"“இறைவாக்கினர்கள், சொந்த ஊரிலும் சுற்றத்திலும் அவரவர் வீட்டிலும் தவிர, மற்றெங்கும் மதிக்கப்படுவர்."

அருள்மொழி :

இயேசு தொழுகைக் கூடத்தில் அவர்களிடம், “சொந்த ஊரிலும் சுற்றத்திலும் தம் வீட்டிலும் தவிர மற்றெங்கும் இறைவாக்கினர் மதிப்புப் பெறுவர்” என்றார்.

வார்த்தை வாழ்வாக:

“யாரிடமும் பாடம் கற்காத இயேசுவுக்கு, இவ்வளவு ஞானமும் சக்தியும் எங்கிருந்து வந்தது? கல்வியறிவில்லாத மீனவர்கள் இவ்வளவாக முழங்குவது எப்படி?” என்று தலைமைச் சங்கத்தார் வியப்படைந்தனர். அதிகாலையில் ஆண்டவரின் பாதம் அமரும் அனுபவம் இவர்களுக்கு இல்லை போலும். ஞானம் ஒளி மிக்கது, மங்காதது. அதன்பால் அன்பு கூர்வோர், அதை எளிதில் கண்டு கொள்வர். அதைத் தேடுவோர் கண்டடைவர். தன்னை நாடுவோருக்கு, அது தன்னையே விரைந்து வெளிப்படுத்தும். வைகறையில் அதைத் தேடுவோர் தளர்ச்சி அடைய மாட்டார்கள். ஏனெனில் தன் கதவு அருகில் அது (ஞானம்) அமர்ந்திருப்பதை அவர்கள் காண்பார்கள்.

சுயஆய்வு :

  1. எங்கு? எப்போது? யாரிடம் சென்று பாடம் கற்றார் இயேசு?

இறைவேண்டல்:

ஞானம் ஒளி மிக்கது என்பதை வாழ்வில் உணர்ந்து, இயேசுவைப் போல செயல்பட வரம் தாரும்.


www.anbinmadal.org