அருள்வாக்கு இன்று | arulvakku-2

ஆகஸ்ட், 2 - வியாழன்
இன்றைய நற்செய்தி

மத்தேயு13:47-53

""விண்ணரசு, எல்லா வகையான மீன்களையும் வாரிக் கொண்டு வரும் வலைக்கு ஒப்பாகும்."

அருள்மொழி :

இயேசு, மக்களை நோக்கிக் கூறியது: "விண்ணரசு, கடலில் வீசப்பட்டு எல்லா வகையான மீன்களையும் வாரிக் கொண்டு வரும் வலைக்கு ஒப்பாகும்” என்றார்.

வார்த்தை வாழ்வாக:

படைக்கப்பட்ட யாவும் இறைவன் மனிதனுக்குத் தந்த மாபெரும் வற்றாத கொடை. இவைகளைச் சுயநலனுக்காகப் பயன்படுத்துவதை நிறுத்திவிட்டு, எல்லாமும் எல்லாருக்கும் என்ற விரிந்த பரந்த தாராளமான மனதோடு வாழ அழைப்பு விடுக்கிறார் இயேசு. படைப்புகள் யாவும் எல்லோருக்கும் எல்லாமும் நல்லதல்ல. எனக்கு எது தேவையோ அதை மட்டும் எடுத்துக் கொண்டு, மற்றவைகளை மற்றவருக்கு விட்டுக் கொடுத்து வாழ்ந்தால், நமது வாழ்வில் அழுகையும், சோகமும், அங்கலாய்ப்பும் இருக்காது.

சுயஆய்வு :

  1. அழுகைக்கும் அங்கலாய்ப்புக்கும் காரணம் என்ன என்று புரிந்து கொள்வோமா?

இறைவேண்டல்:

வாழ்வின் இறைவா! நல்லவற்றை நாடி, நாளும் நலமாய் வாழ வரம் தாரும்.


www.anbinmadal.org