அருள்வாக்கு இன்று |arulvakku-1

ஆகஸ்ட்,1 - புதன்
இன்றைய நற்செய்தி

மத்தேயு 13:44-46

"விண்ணரசு புதையலுக்கு ஒப்பாகும்."

அருள்மொழி :

இயேசு, மக்கள் கூட்டத்துக்கு உவமைகள் வாயிலாக உரைத்தார். “விண்ணரசு இப்புதையலுக்கு ஒப்பாகும்.”

வார்த்தை வாழ்வாக:

இன்றைய நற்செய்தியில் வரும், விலை மதிப்பிட முடியாத புதையலையும் முத்தையும் பெறுவதற்கான வழியை ஆண்டவர் அழகாகக் காட்டுகிறார். இயேசு காட்டும் வழி ஒரே வழி, அது தனி வழி. முற்றிலும் மாறுபட்டது. அது, தனக்குள்ள யாவற்றையும் இழந்து, அந்த விலை மதிப்பில்லாச் சொத்தை வாங்க வேண்டும் என்பதே. இலவசத்திற்கு என்றுமே மதிப்பில்லை. இலவசங்களைக் கண்டு மயங்கி ஓடுவதை விட்டு விட்டு, நேர்மையாய் உழைத்து, உண்டு வாழ்வோம். விண்ணரசை நமதாக்கிக் கொள்வோம். உழைத்து உண்டு, உறவில் உயர்ந்து, விண்ணரசை நமதாக்குவோம். (இடம் பிடிப்போம்)

சுயஆய்வு :

  1. புதையல் உவமையிலிருந்தும், முத்து உவமையிலிருந்தும் புரிந்து கொண்டது என்ன?

இறைவேண்டல்:

வாழ்வின் இறைவா! கருவூலத்தில் எவ்வளவு சேர்த்தாலும், விண்ணரசினுள் கொண்டு செல்ல முடியாது என உணரும் வரம் தாரும். .


www.anbinmadal.org