ஜூலை , 31 - செவ்வாய்
புனித இன்னாசியார் நினைவு
இன்றைய நற்செய்தி

மத்தேயு 13:36-43

"நேர்மையாளர் தந்தையின் ஆட்சியில் கதிரவனைப் போல் மின்னுவர்."

அருள்மொழி:

அப்போது நேர்மையாளர் தம் தந்தையின் ஆட்சியில் கதிரவனைப்போல் ஒளிவீசுவர் கேட்கச் செவியுள்ளோர் கேட்கட்டும்."
மத்தேயு 13:43

வார்த்தை வாழ்வாக:

இன்றைய நற்செய்தியில், இயேசுவிடம் சீடர்கள், வயலில் தோன்றிய களைகளைப் பற்றிய விளக்கம் கேட்கின்றனர். இறைமகன், “நல்ல விதைகள் விதைப்பவர் - மானிட மகன். வயல் - இவ்வுலகம். களைகள் - தீயோன். விதைப்பவன் - பகைவன், அலகை. அறுவடை - உலகின் முடிவு. அறுவடை செய்பவர்கள் - வானதூதர்கள். இங்கு களைகளை வெட்டி தீக்கிரையாக்குவது நரகம். நற்கதிர்களை ஒன்று சேர்ப்பது விண்ணகம். இங்கே இறையாண்மையில் மூழ்கி, இறைவனை முக முகமாய் தரிசிக்கும் பேரின்பம் அடைவார்கள். இதனை அடைய இவ்வுலகம்தான் துலாக்கோல். இங்கு எவ்வாறு நமது செயல்பாடுகள் உள்ளதோ, அதன் பிரதிபலன்தான் விண்ணக வாழ்வு - அல்லது நரகம். இதனை அறிந்து புரிந்து வாழவே இந்த உவமை.”

சுயஆய்வு :

  1. நேர்மையாளர் யார்? அறிகிறேனா?
  2. அறுவடைக்குத் தகுந்த கதிர்களைக் கொண்டுள்ளேனா?

இறை வேண்டல்:

அன்பு இயேசுவே, இவ்வுலக வாழ்வில், உமது அரியணையில் வந்து உடன் பயணிக்கும் ஆன்மாவாக நான் வாழும் வரம் தாரும். ஆமென்.


www.anbinmadal.org