ஜூன், 30 - சனி
இன்றைய நற்செய்தி:

மத்தேயு 8:5-17

"நான் உவமைகள் வாயிலாகப் பேசுவேன். உலகம் தோன்றியது முதல் மறைந்துள்ளவற்றை விளக்குவேன்.”

அருள்மொழி:

"நான் உவமைகள் வாயிலாகப் பேசுவேன்; உலகத் தோற்றமுதல் மறைந்திருப்பவற்றை விளக்குவேன்" என்று இறைவாக்கினர் உரைத்தது இவ்வாறு நிறைவேறியது.
மத்தேயு 8:13

வார்த்தை வாழ்வாக:

இன்றைய நற்செய்தியில், இயேசு, உவமைகள் வாயிலாக இறையரசின் மேன்மையை விளக்குகின்றார். கடுகு விதை மிகச் சிறியதாக இருப்பினும், அது முளைத்து வளர்ந்து மரமாகி கிளைகளாகி, அதில் வேற்றினப் பறவைகள் வந்து கூடு கட்டி வாழும் நிலை மனிதரிடையே வர வேண்டும். இயற்கைக்கே இத்தகைய வலிமையை இறைவன் கொடுத்துள்ளாரெனில், நாம் ஆறறிவு படைத்த மனித இனம். நாம் இக்கடுகு விதையைக் காட்டிலும் உயர்ந்தவர்களல்லவா? எனவே இவ்வுவமைகள் வழங்கும் பாடங்கள் நம் ஒவ்வொருவரின் வாழ்வின் நங்கூரமாகட்டும். இதுவே இறைமகன் மூன்றாண்டு காலம் தந்தையின் படைப்பான நமக்கு ஊர் ஊராகச் சுற்றி இறையரசின் கூறுகளை விளக்குகின்றார். ஏற்போம். இறையரசின் மேன்மையைக் காண்போம்.

சுயஆய்வு :

  1. உலகம் தோன்றியது முதல் பேசியவரை அறிகிறேனா?
  2. உவமைகள் தரும் கருத்துக்களை அறிகிறேனா?

இறை வேண்டல்:

அன்பு இயேசுவே, உவமைகள், சான்றுகள், புதுமைகள் அனைத்தும் என் வாழ்வின்மைல் கல் என்பதை உணர்ந்திடும் வரம் தாரும். ஆமென்,


www.anbinmadal.org