ஜூலை , 28 - சனி
இன்றைய நற்செய்தி:

மத்தேயு 13:24-30

“களைகளை எரிப்பதற்கு கட்டுங்கள். கோதுமைகளை என் களஞ்சியத்தில் சேர்த்து வையுங்கள்.”

அருள்மொழி:

அறுவடைவரை இரண்டையும் வளர விடுங்கள். அறுவடை நேரத்தில் அறுவடை செய்வோரிடம், "முதலில் களைகளைப் பறித்துக் கொண்டு வந்து எரிப்பதற்கெனக் கட்டுகளாகக் கட்டுங்கள். கோதுமையையோ என் களஞ்சியத்தில் சேர்த்து வையுங்கள்" என்று கூறுவேன்" என்றார் ."
மத்தேயு 13:30

வார்த்தை வாழ்வாக:

இன்றைய நற்செய்தியில், இயேசு, வயலில் தோன்றிய களைகளை உவமை வாயிலாக விளக்குகின்றார். அதாவது மனிதனை, படைக்கும் நல்ல மனிதனாகப் படைத்தார். இதற்கிடையில் சாத்தான் வந்து. தந்திரத்தில் இடையில் நுழைந்து, தீய எண்ணங்களையும் சுயநலப் போக்கையும் இவ்வுலக ஆசாபாசங்களையும் மனிதனிடையே புகுத்தி, அவனைக் கூறு போடுகின்றன. இதனை அறிந்த கடவுள், “இருக்கட்டும் - வளரட்டும். தன் வாழ்வின் இறுதியில் கூட மனிதன் தன் தவறை உணர்ந்து மனம் மாறி நற்செய்தியின் வழியில் வாழும் காலம் வரும். அது வரை நாம் விட்டு வைப்போம்” என்று நடுநிலை நாயகனாக இறைவன் மனிதன் மீது பரிவு கொண்டு இவ்வுலகை வலம் வருகின்றார். எனவே நாம் நமது தவறுகளை உணர்ந்து மன்னிப்புக் கோரும்போது இறையரசில் இணைவோம் என்பது உறுதி.

சுயஆய்வு :

  1. களைகள் என்றால் என்ன?
  2. கோதுமை மணிகள் என்றால் என்ன?

இறை வேண்டல்:

அன்பு இயேசுவே, நான் மனம் மாறி, இறையரசில் இணைந்திடும் வரம் தாரும். ஆமென்.


www.anbinmadal.org