ஜூலை , 27 - வெள்ளி
இன்றைய நற்செய்தி:

மத்தேயு 13:18-23

“நல்ல நிலத்தில் விதைக்கப்பட்டோர் இறைவார்த்தையைக் கேட்டு நூறு மடங்காகவும், முப்பது மடங்காகவும் பலன் தருவர்.”

அருள்மொழி:

நல்ல நிலத்தில் விதைக்கப்பட்ட விதைகளுக்கு ஒப்பானோர் இறைவார்த்தையைக் கேட்டுப் புரிந்து கொள்வார்கள். இவர்களுள் சிலர் நூறு மடங்காகவும், சிலர் அறுபது மடங்காகவும் சிலர் முப்பது மடங்காகவும் பயன் அளிப்பர்."
மத்தேயு 13:23

வார்த்தை வாழ்வாக:

இன்றைய நற்செய்தியில், இயேசு, விதைப்பவர் உவமை வாயிலாக இவ்வுலக மாந்தரின் எண்ணங்களை எடை போடுகின்றார். ஆம் அன்பர்களே! வழியோரம் விழுந்த விதை மிதிபட்டு, அடிபட்டு நசுங்கிப் போகும். பாறை மீது விழுந்த விதை கற்பாறை போன்று உள்ளம் கொண்டவர்கள். நல்லவற்றை ஏற்காமல் அது தானாகக் காய்ந்து பலனின்றிப் போகும். முட்செடியில் விழுந்த விதை அது பலவிதமான தீச்செயல்களால் நொறுங்குண்டு மேலே எழும்ப முடியாத நிலையில் நொறுங்கிப் போகும். நன்கு பதப்படுத்தப்பட்ட இதயம் கொண்டவர்கள் இறைவார்த்தையைக் கேட்டு, அதன்படி வாழ்ந்து, அடுத்தவருக்கும் தூணாக இருப்பார்கள். இத்தகையோர் இறைவனை நாளும் முகமுகமாய் தரிசிக்கும் பேற்றை மறுமையில் பெறுவார்கள். எனவே, "இறைவார்த்தை உயிருள்ளது. ஊக்கமுள்ளது. அது கருக்கு போன்ற வாள் போன்றது. அது எலும்பின் மஜ்ஜை வரையிலும் ஊடுருவும் ஆற்றல் மிக்கது” எனும் பவுலடியாரின் வரிகளை நமதாக்குவோம்.

சுயஆய்வு :

  1. நல்ல நிலம் எதுவென்று உணர்கின்றேனா?
  2. விதையின் மேன்மை அறிகின்றேனா?

இறை வேண்டல்:

அன்பு இயேசுவே, அன்பு இயேசுவே, என் இதயம், பண்பட்ட நிலமாகிடும் வரம் தாரும். ஆமென்.


www.anbinmadal.org