ஜூலை , 25 - புதன்
புனித யாக்கோபு திருத்தூதர் நினைவு
இன்றைய நற்செய்தி:

மத்தேயு 20:20-28

“மானிட மகன் தொண்டு பெறுவதற்கல்ல, தொண்டாற்றவே வந்தார்."

அருள்மொழி:

இவ்வாறே மானிட மகனும் தொண்டு ஏற்பதற்கு அல்ல, தொண்டு ஆற்றுவதற்கும் பலருடைய மீட்புக்கு ஈடாக தம் உயிரைக் கொடுப்பதற்கும் வந்தார்" என்று கூறினார்.
மத்தேயு 20:28

வார்த்தை வாழ்வாக:

இன்றைய நற்செய்தியில், இயேசு, செபதேயுவின் மக்கள் மறுமையில் இயேசுவின் வலப்பக்கமும் இடப்பக்கமும் அமர வேண்டும் என்று கேட்கும் தாய்க்குப் பதில் சொல்கின்றார். “இயேசுவின் துன்பக் கிண்ணத்தில் உம்மால் பருக முடியுமா?” என்றதற்கு, “ஆம், முடியும்” என்றனர். அதே வேளையில் “வலப்பக்கம், இடப்பக்கம் அமருவதோ என் தந்தையின் விருப்பம். அவர் யாருக்கு விரும்புகிறாரோ அவருக்குக் கிடைக்கும்” என்றார். தொடர்ந்து, “மானிட மகன் தொண்டு ஏற்பதற்கல்ல, மாறாக ஏழை எளியோருக்குத் தொண்டு ஆற்றவே வந்தேன்” என்கின்றார். இறைமகனாக இருப்பினும், அவர் தம்மைத் தாமே தாழ்த்தி, வறியோர் அனைவருக்கும் உறவுப் பாலமாகத் திகழ்கின்றார் என்பதை நாம் இவ்வுலக வாழ்வில், பட்டம், பதவி, முதன்மையிடம் இவற்றை நாடிச் செல்கிறோம். ஆனால் இவ்வுலக வாழ்வில் முதன்மையானோர் மறுவுலக வாழ்வில் கடைசியாவார் என்று பதிவு செய்கின்றார்.

சுயஆய்வு :

  1. தொண்டு என்றால் என்ன? அறிகிறேனா?
  2. என் தொண்டு எத்தகையோருக்கு? உணர்கிறேனா?

இறை வேண்டல்:

அன்பு இயேசுவே, வறியோர் பக்கம் என் தொண்டு ஒளிர்ந்திடும் வரம் தாரும். ஆமென்.


www.anbinmadal.org