ஜூலை , 24 - செவ்வாய்
இன்றைய நற்செய்தி:

மத்தேயு 12: 46-50

“விண்ணகத்திலுள்ள என் தந்தையின் திருவுளத்தை நிறைவேற்றுபவர்களே என் சகோதரரும் தாயும் ஆவர்.”

அருள்மொழி

என் தந்தையின் திருவுளத்தை நிறைவேற்றுபவரே என் சகோதரரும் சகோதரியும் தாயும் ஆவார்" என்றார்.
மத்தேயு 12: 50

வார்த்தை வாழ்வாக:

இன்றைய நற்செய்தியில், இயேசுவின் உண்மையான உறவினர் யார் என்பதைப் புடமிட்டுக் காட்டுகின்றார். எப்படி எனில், அன்றைய சூழலில் மோசேயின் சட்டத்தை வைத்தே குற்றம் கூறியவர்களுக்கு உண்மை உறவு யார் என்பதே கேள்வி, அன்னை மரியா, தன் விடலைப் பருவத்தில் கன்னிமை குன்றா கன்னி. கபிரியேலின் மங்களச் செய்தியைக் கேட்டு, அதாவது “கடவுளால் ஆகாதது ஒன்றுமில்லை ” வரிகள் அவரை “உம் வார்த்தையின்படியே எனக்கு நிகழட்டும்" என்றதினால் அவரிடம் வாக்கு மனுவுருவானார், நம்மிடையே குடி கொண்டார். இதுவே மாபெரும் சாட்சியமாகும். தம் சீடர்கள் இறைமகனின் இறையரசுப்பணியைச் செய்து வந்தார்கள். எனவேதான் விண்ணகத்திலுள்ள தந்தையின் திருவுளத்தை நிறைவேற்றும் உறவுகளாகத் திகழ்கின்றனர் என்பதே உண்மை .

சுயஆய்வு :

  1. தந்தையின் திருவுளம் யாது? அறிகிறேனா?
  2. இத்திருவுளத்தை நிறைவு செய்ய என் முயற்சி யாது?

இறை வேண்டல்:

அன்பு இயேசுவே, உமது திருவுளப்படி என்னை வழிநடத்திடும் வரம் தாரும். ஆமென்.

.


www.anbinmadal.org