ஜூலை , 22 - ஞாயிறு
இன்றைய நற்செய்தி:

மாற்கு 6:30-34

"நீங்களே அவர்களுக்கு உணவு கொடுங்கள்.”

அருள்மொழி:

"அவர் அவர்களிடம், "நீங்களே அவர்களுக்கு உணவு கொடுங்கள்" என்று பதிலளித்தார். அவர்கள், "நாங்கள் போய் இருநூறு தெனாரியத்திற்கு அப்பம் வாங்கி இவர்களுக்கு உண்ணக் கொடுக்க வேண்டும் என்கிறீரா?" என்று கேட்டார்கள்.
மாற்கு 6:37

வார்த்தை வாழ்வாக:

இன்றைய நற்செய்தியில், இயேசுவிடம் சீடர்கள், தாங்கள் செய்தவை, கற்பித்தவை அனைத்தையும் தெரிவித்தனர். இறைமகன், "நீங்கள் சற்று பாலை நிலத்தில் ஓய்வெடுங்கள்” என்றார். இவர் வருவதைப் பார்த்த மக்கள் கூட்டம் அதிகம் வந்து சேரவே, அவர்களைக் கண்டு அவர்கள் மீது பரிவு கொண்டார். ஆயரில்லா ஆடுகளைப் போல் மக்கள் அல்லலுறுவதைக் கண்ட இயேசு, பலவற்றை அவர்களுக்குக் கற்பித்தார். நேரமாகிவிடவே இவர்களுக்கு உணவிற்கு எங்கு போவது என்று சீடர்கள் கேட்கவே, “நீங்களே அவர்களுக்கு உணவு கொடுங்கள்” என்றார். எவ்வாறு என்று சிந்திக்கையில், "உங்களிடம் எத்தனை அப்பம் உள்ளது என்று போய்ப் பாருங்கள்” என்றதும், அங்கு 5 அப்பங்களும், 2மீன்களும் இருப்பதைக் கூறினர். அனைவரையும் பசும்புல் தரையில் அமரச் செய்து, 5 அப்பங்களையும், 2 மீன்களையும் கையிலெடுத்து வானத்தை அண்ணாந்து கடவுளைப் போற்றி, பிட்டு, "கொடுங்கள்” என்றார். அவ்வாறே பெண்கள், குழந்தைகள் நீங்கலாக ஆண்கள் மட்டும் ஐயாயிரம் உண்டு, மீதி 12 கூடைகளில் நிரப்பினர்.

சுயஆய்வு :

  1. அப்பமும் மீனும் எத்தனை இருந்தன?
  2. வயிறார உண்டவர்கள் எத்தனை பேர், அறிகிறேனா?

இறை வேண்டல்:

அன்பு இயேசுவே, உமது பரிவிரக்கம் நாளும் நான் பெற்றிடும் வரம் தாரும். ஆமென்.


www.anbinmadal.org