ஜூலை , 21 - சனி
இன்றைய நற்செய்தி:

மத்தேயு. 12:14-21

“எல்லா மக்களினங்களும் இவர் பெயரில் நம்பிக்கை கொள்வர்."

அருள்மொழி:

எல்லா மக்களினங்களும் இவர் பெயரில் நம்பிக்கை கொள்வர்."
மத்தேயு 12:21

வார்த்தை வாழ்வாக:

இன்றைய நற்செய்தியில், இயேசு, சூம்பிய கை உடையவரை ஓய்வு நாளில் குணப்படுத்துகின்றார். இதனைக் குற்றமாக எடுத்துக் கொண்ட சிலர், “நீர் ஓய்வு நாளில் குணப்படுத்துவது சரியா?” என்று கேள்வியை முன்வைத்தனர். இயேசு அவர்களிடம், "ஓர் ஆடு குழியில் விழுந்து விட்டால் அதை ஓய்வு நாளில் காப்பாற்றாமல் விடுவீரா? அதைவிடச் சிறந்தவர் அன்றோ மனிதன். அவர் கை சூம்பி பல நாட்கள் வேதனையுள்ளவரை இறைமகன் காணும்போது, அவரைக் குணப்படுத்துவதுதானே இறை இயல்பு. இதுவும் மனிதருக்கும் உண்டல்லவா?" என்பதை இங்கே பதிவு செய்கின்றார். பிறகு இயேசு கை சூம்பியவரை நோக்கி, “உன் கையை நீட்டும்” என்றார். உடனே நலமடைந்தது. எசாயா, “இதோ உன் ஊழியர். நான் தேர்ந்து கொண்டவர், எல்லா மக்களிகனங்களும் இவர் பெயரில் நம்பிக்கை கொள்வர்” எனும் வரிகள் இவ்வாறு நிறைவேறியது

சுயஆய்வு :

  1. இதோ என் ஊழியர் என்பவரை அறிகிறேனா?
  2. இவர் பெயரில் என் நம்பிக்கை எத்தகையது?

இறை வேண்டல்:

அன்பு இயேசுவே, நின் பணியை ஆற்றிட போதுமான நம்பிக்கையை என்னில் பொழிந்திடும் வரம் தாரும். ஆமென்.www.anbinmadal.org