ஜூலை , 20 - வெள்ளி
இன்றைய நற்செய்தி:

மத்தேயு 12:1-8

“பலியை அல்ல, இரக்கத்தையே விரும்புகிறேன்."

அருள்மொழி:

"பலியை அல்ல, இரக்கத்தையே விரும்புகிறேன்" என்பதன் கருத்தை நீங்கள் அறிந்திருந்தால் குற்றமற்ற இவர்களைக் கண்டனம் செய்திருக்கமாட்டீர்கள்.
மத்தேயு 12:7

வார்த்தை வாழ்வாக:

இன்றைய நற்செய்தியில், இயேசு, ஓய்வு நாளில் கதிர் கொய்து தின்று பசியாற்றியது குற்றமென்று சாடும் பரிசேயர்களைச் சாடுகின்றார். ஓய்வு நாள் என்பது உலக ஆசாபாசங்களிலிருந்து விலகி, இறைவனுக்குகந்த அறச் செயல்களைச் செய்து, அடுத்தவரின் பசி, தாகம் தீர்ப்பது தான் ஓய்வு நாள். இதுவே இறைவனுக்கு உகந்த செயல்கள். பசியாயிருக்கும் ஒருவருக்கு உண்ணக் கொடுப்பதும் அறச்செயல்தான். இதன் வல்லமை எத்தகையது என்று உய்த்துணர முடியாது பரிசேயர் இறைமகனைச் சோதிக்கின்றனர். இறைமகனின் உடனிருப்பை உணராதவர்கள்தான் இவ்வாறு செய்ய முடியும். பலியை அல்ல, இரக்கத்தையே விரும்பியதால்தான் அவர் வாழ்ந்த கடைசி மூன்று ஆண்டுகளும் இரக்கத்தின் தூதுவனாக வறியோரைத் தேடிச் சென்று தொண்டாற்றினார் என்பது அனைவரும் அறிந்த ஒன்றே.

சுயஆய்வு :

  1. ஓய்வு நாள் என்றால் என்ன? அறிகிறேனா?
  2. ஓய்வு நாளை எவ்வாறு அனுசரிக்கின்றேன்?

இறை வேண்டல்:

அன்பு இயேசுவே, உமது இரக்கப் பெருக்கத்தை நாளும் சுவைத்திடும் வரம் தாரும். ஆமென்.


www.anbinmadal.org