ஜூலை , 19 - வியாழன்
இன்றைய நற்செய்தி:

மத்தேயு 11:28-30

"உங்கள் விண்ணகத் தந்தை நிறைவுள்ளவராய் இருப்பது போல நீங்களும் நிறைவுள்ளவராய் இருங்கள்.”

அருள்மொழி:

நான் கனிவும் மனத்தாழ்மையும் உடையவன். ஆகவே என் நுகத்தை உங்கள்மேல் ஏற்றுக்கொண்டு என்னிடம் கற்றுக்கொள்ளுங்கள். அப்பொழுது உங்கள் உள்ளத்திற்கு இளைப்பாறுதல் கிடைக்கும்.
மத்தேயு 11:29

வார்த்தை வாழ்வாக:

இன்றைய நற்செய்தியில், இயேசு, “பெருஞ்சுமை சுமந்து சோர்ந்திருப்போரே, எல்லாரும் என்னிடம் வாருங்கள். நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்” என்று தம் இரு கரம் விரித்து அழைப்பு விடுக்கின்றார். வாருங்கள் இறைசமூகமே, அவரில் தஞ்சம் புகுவோம். இவ்வுலகச் சூழல் இப்போது சாதி, சமயம், இனம், மொழி போன்ற கலவரங்களால் பிளவுபட்டுள்ளது. நாம் வாழும் இல்லமும் பலவிதக் குழப்பங்களில் தவித்துக் கொண்டிருக்கும் தருணத்தில், நமது பெருஞ்சுமைகளை இறைவனின் பாதத்தில் வைத்துச் சரணடைவோம். அவர் தரும் இளைப்பாறுதல் நமக்குக் கிடைக்கும் என்ற வேட்கையில், இறை-மனித உறவில் சங்கமிப்போம். நம்மோடு இறைமகன் வலம் வருகின்றார். அவரது உடனிருப்பை உணரும் வண்ணம் நமது வாழ்க்கை இருக்க வேண்டும் என்பதில் கவனமுடன், இகமதில் ஏழையரின் உள்ளத்தில் - மகிழ்வில் இறைவனைக் காண்போம்.

சுயஆய்வு :

  1. என் சுமைகளை இறைமகனிடம் வைக்கின்றேனா
  2. அவர் தரும் இளைப்பாறுதலைப் பெறத் தகுதியிலுள்ளேனா?

இறை வேண்டல்:

அன்பு இயேசுவே, என் சுமையை உமது பாதங்களில் இறக்கிடும் வரம் தாரும். ஆமென்.


www.anbinmadal.org