ஜூலை , 17 - செவ்வாய்
இன்றைய நற்செய்தி:

மத்தேயு 11 :20-24

“கப்பர் நாகுமே! வானளாவ உயர்த்தப்படுவாயோ. இல்லை இல்லை, பாதாளம் வரை தாழ்த்தப்படுவாய்."

அருள்மொழி:

கப்பர்நாகுமே, நீ வானளாவ உயர்த்தப்படுவாயோ? இல்லை, பாதாளம்வரை தாழ்த்தப்படுவாய். ஏனெனில் உன்னிடம் செய்யப்பட்ட வல்ல செயல்கள் சோதோமில் செய்யப்பட்டிருந்தால் அது இன்றுவரை நிலைத்திருக்குமே!
மத்தேயு 11:23

வார்த்தை வாழ்வாக:

இன்றைய நற்செய்தியில், இயேசு, திருந்த மறுத்த நகரங்களுக்குச் சாபம் விடுகின்றார். மனிதன் பிளவுபட்ட நிலையில், கடவுளே மனு உருவெடுத்து பல துன்பங்களுக்கிடையில் பல நகரங்களுக்கெல்லாம் பட்டி தொட்டிகளுக்கெல்லாம் வல்ல செயல்கள் புரிந்து, நாம் எப்படி வாழ வேண்டும் என்று போதனைகளாலும், புதுமைகளினாலும், பிணி தீர்த்தல் வாயிலாகவும் செய்தவை அனைத்தும் வீணாகி, மனிதன் பிளவுபட்ட நிலையிலேயே இருந்த காட்சி, இயேசுவுக்குச் சினத்தை உருவாக்கியது. எனவேதான் வெகுண்டெழுந்து சாபம் விடுகின்றார். ஆம் அன்பர்களே! இன்றும் பலர் இறைவார்த்தையைக் கேட்டும் கேளாதவாறு திருச்சட்டத்தை அசட்டை செய்தும், ஏழை எளியோரைத் துன்புறுத்தியும், சுயநலப் போக்கோடு வாழ்வோரையும் இன்று கண்டிக்கிறார் என்பதை உணர்வோம்.

சுயஆய்வு :

  1. போதனைகளின்படி நடக்கின்றேனா?
  2. மேலோட்டமான கிறிஸ்துவ வாழ்வு வாழ்கிறேனா?

இறை வேண்டல்:

அன்பு இயேசுவே, அன்பு இயேசுவே, உமது கட்டளைப்படி வாழும் வரம் தாரும். ஆமென்.


www.anbinmadal.org