ஜூலை , 15 - ஞாயிறு
இன்றைய நற்செய்தி

மாற் 6:7-13

“உங்களை எவராவது ஏற்றுக்கொள்ளாமல் போனால் உங்கள் காலில் படிந்துள்ள தூசியை உதறி விடுங்கள்.”

அருள்மொழி :


மாற் 6:11

வார்த்தை வாழ்வாக:

இன்றைய நற்செய்தியில், இயேசு, தம் பன்னிரு சீடர்களை நற்செய்திகளின் பொருட்டு, இருவர் இருவராக அனுப்புகின்றார். “நீங்கள் செல்லும்போது கைத்தடி தவிர, உணவு, பை, செப்புக்காசு முதலிய எவற்றையும் எடுத்துச் செல்ல வேண்டாம். மிதியடி போதும். ஓர் அங்கியும் போதும். நீங்கள் செல்லும் வீட்டிலேயே தங்கியிருங்கள். உங்கள் போதனைகளை ஏற்றுக் கொள்ளாமல் போனால் அங்கிருந்து புறப்படும்போது, உங்கள் காலிலுள்ள தூசிகளைத் தட்டி விடுங்கள். இதுவே நீர் அவர்களுக்கு எதிரான சான்றாகும்” என்று இறைமகன் இன்றும் நமக்காகப் பல அறிவுரைகளை வழங்குகின்றார். இன்று எங்கு நோக்கினும் மதக் கலவரங்கள், போராட்டங்கள், இளம் சிறார்கள் பாலியல் வன்கொடுமைகள் தலைவிரித்தாடும் வேளையில், இந்தச் சூழலை நாம் எவ்வாறு சிரமேற்கொள்ள வேண்டுமென்று இறைமகனின் ஆலோசனைகளை ஊன்றிக் கவனிப்போம்.

சுயஆய்வு:

  1. நான் களப்பணி ஆற்றச் செல்கின்றேனா?
  2. அதற்கான ஆயத்தப் பணிகளைச் செய்கிறேனா?

இறைவேண்டல்:

அன்பு இயேசுவே, உமது நற்செய்தியைக் கவனமுடன் சமுதாயத்தில் பறைசாற்றும் வரம் தாரும். ஆமென்.


www.anbinmadal.org