ஜூலை , 14 - சனி
இன்றைய நற்செய்தி:

மத்தேயு 10:24-33

"ஆன்மாவையும் உடலையும் அழிக்க வல்லவருக்கே அஞ்சுங்கள்."

அருள்மொழி :

ஆன்மாவைக் கொல்ல இயலாமல். உடலை மட்டும் கொல்பவர்களுக்கு அஞ்சவேண்டாம். ஆன்மாவையும் உடலையும் நரகத்தில் அழிக்க வல்லவருக்கே அஞ்சுங்கள்.
மத்தேயு 10:28

வார்த்தை வாழ்வாக:

இன்றைய நற்செய்தியில், இயேசு "யாருக்கும் இஞ்ச வேண்டாம். சீடர் குருவை விட பெரியவர் அல்ல. அதேவேளையில் சீடர் குருவைப் போல ஆகட்டும். பணியாளர் தலைவரைப் போல ஆகட்டும். யாருக்கும் அஞ்சவேண்டாம். உடலை மட்டும் கொல்பவருக்கு அல்ல, ஆன்மாவையும் அழிக்க வல்லவரை நம்புங்கள் என்ற இறைமகன் இயேசு உறுதியாக சான்று பகர்கின்றார். அன்புள்ளங்களே இறை - மனித உறவில் வாழ்ந்திடும் வரம் பெற்றிடுவோம். இறைமையில் இணைந்திடுவோம்.

சுயஆய்வு :

  1. ஆன்மாவையும் உடலையும் காப்பவரை அறிகிறேனா?
  2. அஞ்சா உள்ளத்தினை கொண்டுள்ளேனா?

இறைவேண்டல்:

அன்பு இயேசுவே, எல்லோரிலும் பணி செய்யும் ஆற்றலைத் தாரும். ஆமென்,


www.anbinmadal.org