ஜூலை , 12 - வியாழன்
இன்றைய நற்செய்தி

மத்தேயு 10:7-15

“உங்களை எவராவது ஏற்றுக் கொள்ளாவிட்டால் வீட்டை விட்டு வெளியேறும்பொழுது உங்கள் கால்களிலுள்ள தூசியை உதறிவிடுங்கள்.”

அருள்மொழி :

உங்களை எவராவது ஏற்றுக் கொள்ளாமலோ, நீங்கள் அறிவித்தவற்றுக்குச் செவிசாய்க்காமலோ இருந்தால் அவரது வீட்டை, அல்லது நகரைவிட்டு வெளியேறும்பொழுது உங்கள் கால்களில் படிந்துள்ள தூசியை உதறிவிடுங்கள்.
மத். 10:14

வார்த்தை வாழ்வாக

இன்றைய நற்செய்தியில், இயேசு தன் சீடர்களிடம் "நீங்கள் நற்செய்தியை அறிவிக்கும் பொருட்டு செல்லும் போது உங்களுக்காக எதையும் எடுத்துச் செல்ல வேண்டாம். ஏனெனில் வேலையாள் தம் உணவுக்கு உரிமை உடையவரே. நீங்கள் எந்த வீட்டிற்கு சென்றாலும் அவர்களுக்கு வாழ்த்துக் கூறுங்கள். வீட்டார் தகுதியுள்ளவராக இருந்தால் நீங்கள் கூறிய வாழ்த்து அவர்களிடமே தங்கும் இல்லையேல் அது உங்களிடமே திரும்பிவிடும். அதேவேளையில் உங்களை எவராவது ஏற்றுக் கொள்ளாவிட்டால் வீட்டை விட்டு வெளியேறும்போது உமது காலிலுள்ள தூசியைக் கூடத் தட்டி விட்டு வாருங்கள். நீங்கள் தரும் அமைதியை ஏற்றுக் கொள்பவர்கள் அங்கிருந்தால் அமைதி அவர்கள் மேலே தங்கட்டும் என்று இன்றும் நமக்காக பேசிகின்றார்,

சுயஆய்வு:

  1. அமைதி என்றால் என்ன?
  2. அமைதியை அளிக்க என் தகுதி யாது?

இறைவேண்டல்:

அன்பு இயேசுவே, நற்செய்தியின் பொருட்டு அமைதியை நான் அடையும் தகுதியை எனக்கு வழங்கிடும் வரம் தாரும். ஆமென்.


www.anbinmadal.org