= arulvakku-11

ஜூலை , 11 - புதன்
இன்றைய நற்செய்தி:

மத்தேயு10:1-7

"விண்ணரசு நெருங்கி வந்துவிட்டது"

அருள்மொழி :

அப்படிச் செல்லும்போது "விண்ணரசு நெருங்கி வந்துவிட்டது" எனப் பறைசாற்றுங்கள்.
மத்தேயு 10:7

வார்த்தை வாழ்வாக:

இன்றைய நற்செய்தியில், இயேசு, தம் திருத்தூதர்களுக்கு திருப்பொழிவுச் செய்து அவர்கள் பேய்களை ஊட்டவும், நோய்களை குணமாக்கவும் அவர்களுக்கு அதிகாரம் அளித்தார். எப்படி செல்ல வேண்டும்? என்று அறிவுரை வழங்கினார். பிற இனத்தவர் - சமாரியர் - ஆகியோரின் எப்பகுதிக்கும் செல்லவேண்டாம். வழி தவறிய ஆடுகளான இஸ்ரலேயரிடமே செல்லுங்கள். விண்ணரசு நெருங்கிவிட்டது. மனம் மாறி நற்செய்தியை நம்புங்கள் என்று பறைச்சாற்றும்படி அனுப்புகின்றார். இன்றும் நம்மிடையே கிறிஸ்துவின் பெயரால் வாழ்பவர் இன்னும் நிலையான இறையரசு எது என்று புரிந்துக் கொள்ளாமல் அங்கும் - இங்கும் அலைபாயும் உள்ளத்தோடு தான் உள்ளனர். இத்தகையோருக்கு தேவை நற்செய்தி பணிங்கள்

சுயஆய்வு :

  1. விண்ணரசு நெருங்கி வந்துவிட்டது. அறிகிறோனா?
  2. அதற்கான செயல்பாடுகள் என்ன? உணர்கிறேனா?

இறை வேண்டல்:

அன்பு இயேசுவே, இறையரசின் மேன்மையை உணர்ந்து அதன்படி வாழும் வரம் தாரும். ஆமென்.


www.anbinmadal.org