ஜூலை , 9 - திங்கள்

இன்றைய நற்செய்தி:
மத் 9:18-26

“விலகிப் போங்கள். சிறுமி இறக்கவில்லை .”

அருள்மொழி:

அவர்," விலகிப் போங்கள்; சிறுமி இறக்கவில்லை, உறங்குகிறாள்" என்றார். அவர்களோ அவரைப் பார்த்து நகைத்தார்கள்.
மத் 9:24

வார்த்தை வாழ்வாக:

இன்றைய நற்செய்தியில், இயேசு, "தொழுகைக் கூடத் தலைவரின் மகள் இப்பொழுதுதான் இறந்தாள். ஆயினும் நீர் வந்து அவள் மீது உம் கையை வையும், அவள் உடனே உயிர் பெறுவாள்" என்று முழு நம்பிக்கையோடு இயேசுவிடம் பணிந்து கேட்டான். அதன் பேரில் இறைமகன் தலைவரின் இல்லத்திற்குச் சென்றார். அங்கு இறந்தவர்களின் சடங்கு முறைகள் நடந்து கொண்டிருந்தன. அவ்வேளையில் இயேசு அங்கு சென்று, “விலகிப் போங்கள், சிறுமி இறக்கவில்லை” என்று ஆணித்தரமாகச் சொன்னார், சொன்னபடியே சிறுமியின் கையைப் பிடித்தார். அவளும் குணம் பெற்று எழுந்தாள். இச்செய்தி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. ஆம் அன்பர்களே! இயேசு தொட்டால் போதும், நம் உடலெல்லாம் அற்புதம் காணும் எனும் வரிகள் நம்மில் நிறைவேறிட செபிப்போம்.

சுயஆய்வு:

  1. விலகிப் போங்கள் என்றவரை அறிகிறேனா?
  2. கையைத் தொட்டு எழுப்பியவர் யார்?

இறை வேண்டல்:

அன்பு இயேசுவே, உமது கரம் என் மீது தொட்டு, நான் ஆன்ம சுகம் பெற்று வாழும் வரம் தாரும். ஆமென்.


www.anbinmadal.org