அன்பின்மடல்

ஜூலை , 8 - ஞாயிறு
இன்றைய நற்செய்தி:

மாற்கு 6:1-6

சொந்த ஊரிலும் சுற்றத்திலும் நம் வீட்டிலும் தவிர மற்றெங்கும் இறைவாக்கினர் மதிக்கப்படுவர்.”.

அருள்மொழி :

இயேசு அவர்களிடம், "சொந்த ஊரிலும் சுற்றத்திலும் தம் வீட்டிலும் தவிர மற்றெங்கும் இறைவாக்கினர் மதிப்புப் பெறுவர்" என்றார்.
மாற்கு. 6:4

வார்த்தை வாழ்வாக:

இன்றைய நற்செய்தியில், இயேசு, தம் சொந்த ஊரான நாசரேத்திற்குச் சென்றார். அங்கு தொழுகைக் கூடத்தில் கற்பிக்கத் தொடங்கினார். இவரது போதனையைக் கேட்ட அனைவரும் வியப்பில் ஆழ்ந்தனர். “இவருக்கு எங்கிருந்து வந்தது இந்த ஞானம். இவர் தச்சன் மகனல்லவா?” என்று மலைத்துப் போனவர்களைக் கண்டு இயேசு, “தம் சொந்த ஊரிலும், சுற்றத்திலும் தவிர மற்றெங்கும் இறைவாக்கினர் மதிக்கப்படுவர்" என்று இறைமகனே இதனை ஆணித்தரமாகப் பதிவு செய்கின்றார். காரணம், இன்றும் தம் சொந்த வீட்டில், ஊரில் இறைவாக்கு உரைப்பவர்கள் மதிக்கப்படுவதில்லை என்பது உண்மையே. இந்த அனுபவம், இயேசு அனுபவத்திலிருந்து எழுந்த அனுபவமாகும். இருப்பினும் எதையும் கண்டுகொள்ளாமல் மூன்றாண்டு காலம் போதனைகள் வாயிலாகவும், புதுமைகள் வாயிலாகவும் இரையரசின் விழுமியங்களை நமக்கு விட்டுச் சென்றுள்ளார்.

சுயஆய்வு :

  1. இறைவாக்கினரை அறிகின்றேனா?
  2. சொந்த வீடும் - ஊரும் கூறும் செய்தி யாது?

இறை வேண்டல்:

அன்பு இயேசுவே, எந்த நிலையிலும் உமது வாக்கு என் வாழ்வாகிடும் வரம் தாரும். ஆமென்..


www.anbinmadal.org