ஜூலை , 6 - வெள்ளி
இன்றைய நற்செய்தி:

மத்தேயு 9:9-13

“நேர்மையாளர்களை அல்ல, பாவிகளையே அழைக்க வந்தேன்.”

அருள்மொழி :

"பலியை அல்ல, இரக்கத்தையே விரும்புகிறேன்" என்பதன் கருத்தை நீங்கள் போய்க் கற்றுக் கொள்ளுங்கள்; ஏனெனில் நேர்மையாளரை அல்ல, பாவிகளையே அழைக்க வந்தேன்" என்றார்.
மத்தேயு 9:13

வார்த்தை வாழ்வாக:

இன்றைய நற்செய்தியில், இயேசு, சுங்கச் சாவடியிலிருந்த மத்தேயு என்பவரைப் பார்த்து, “என்னைப் பின்பற்றி வா” என்று அழைப்பு விடுக்கின்றார். இவர் யூத மரபு நற்செய்தியாளர். இன்றைய நற்செய்தியை விளக்குபவரும் இவரே. இத்தகைய சுங்கச் சாவடியிலிருந்தவரை தன் சீடனாக்கி, இன்றைய இறைமகனின் வரலாற்றை இக்காலத் தலைமுறையினருக்கு அறிவிக்கும் பொறுப்பை இறைமகன் இவருக்கு அளித்துள்ளார். “நேர்மையாளர்களை அல்ல, பாவிகளையே தேடி வந்தேன்” என்ற வரிகள், தன் பிறப்பையே முன்னிறுத்துகின்றது. காரணம் அவரது பிறப்பு எளியோருக்கே என்பதை வலியுறுத்தவே மாட்டுக் குடில் - இடையர்களுக்கு முதல் தரிசனம் என்பதை நாம் சற்று கண்ணோக்குவோமாகில், கிறிஸ்துவின் வருகை எத்தகையோருக்கு என்பதை அறிந்து, நமக்கு அடுத்திருக்கும் மக்களுக்கு உதவிக்கரம் நீட்டுவோம்.

சுயஆய்வு:

  1. அழைப்பு என்பது எத்தகையது? அறிகிறேனா?
  2. பாவிகளையே நாடி வந்தேன் என்பவரை அறிகிறேனா?

இறை வேண்டல்:

அன்பு இயேசுவே, இரக்கத்தின் ஊற்றே, உமது இரக்கத்தில் இணைந்திடும் வரம் தாரும். ஆமென்.


www.anbinmadal.org