ஜூலை , 2 - திங்கள்
இன்றைய நற்செய்தி

மத்தேயு. 8: 18-22

"நீர் என்னைப் பின்பற்றி வாரும். இறந்தோரைப் பற்றிக் கவலை வேண்டாம்."

அருள்மொழி :

இயேசு அவரைப் பார்த்து, "நீர் என்னைப் பின்பற்றி வாரும். இறந்தோரைப்பற்றிக் கவலை வேண்டாம். அவர்கள் அடக்கம் செய்யப்படுவார்கள்" என்றார்.
மத்தேயு. 8:22

வார்த்தை வாழ்வாக:

இன்றைய நற்செய்தியில், இயேசு, மறைநூல் அறிஞர், இயேசுவிடம், “போதகரே, நீர் எங்கு சென்றாலும் உம்மைப் பின்பற்றி வருவேன்” என்றதும், “நரிகளுக்குப் பதுங்கு குழிகளும், வானத்துப் பறவைகளுக்குக் கூடுகளும் உண்டு. ஆனால் மனுமகனுக்கோ தலைசாய்க்க இடமில்லை ” என்றார். ஆம் அன்பர்களே! அவர் விரும்பிய இடம் ஒவ்வொரு மனிதரின் ஆன்மாதான். அதனை அடைய மனிதன் இடம் கொடுக்கவில்லை . காரணம், அவனது சுயநலப் போக்கே. அதே வேளையில், நாம் நிலையற்ற உலகில் வாழும் வாழ்க்கைதான் நிலை என்று இருக்கின்றோம். இறந்தோரைப் பற்றி கவலை கொள்கின்றோம். ஆனால் இறந்தோர் வாழ்வு நமது அல்ல. இவ்வுலக வாழ்வில் நாம் வாழ்ந்த வாழ்வின் பிரதிபலிப்பே மறுவுலக வாழ்வின் ஏணிப்படி என்பதை உணர்வோம். அங்கே உறவுகள் இல்லை. அனைவரும் இறைவன் முன் சமம் என்பதை உணர்ந்து அதற்கான வாழ்வு வாழ்வோம்.

சுயஆய்வு :

  1. என்னைப் பின்பற்றி வாரும் என்பதின் பொருள் அறிகிறேனா?
  2. மறுவுலக வாழ்வுக்கு என் முயற்சி யாது?

இறைவேண்டல்:

அன்பு இயேசுவே, நான் வாழும் உலகில் உமது சிந்தனையில் வாழ்ந்திடும் வரம் தாரும். ஆமென்.


www.anbinmadal.org