arulvakku

ஜூன், 28

இன்றைய நற்செய்தி:

மத்தேயு 10:37-42

" என் பொருட்டுத் தம் உயிரை இழப்போரோ அதைக் காத்துக் கொள்வர். "

அருள்மொழி:

தம் சிலுவையைச் சுமக்காமல் என்னைப் பின்பற்றி வருவோர் என்னுடையோர் எனக் கருதப்படத் தகுதியற்றோர்.
மத்தேயு 10:38

வார்த்தை வாழ்வாக:

இயேசு இறையரசை மண்ணில் பரப்பவே இவ்வுலகிற்கு வந்தார். அவரது நோக்கம் எல்லாரும் எல்லாம் பெறவேண்டும். கடவுளின் சிறந்த படைப்பான மனிதன் ஒரே சீரான சூழலில் வாழ வேண்டும். ஏற்றதாழ்வு அடிமைத்தனம், வேற்றுமை, அநீதி போன்ற அகோரப் பிடியிலிருந்து விடுபட்டு அனைவரும் இறைவனில் சமம் என்ற நிலையை மண்ணக மாந்தார் அடைந்திடவேண்டும். இதுவே அவரது விருப்பமும் அவரை அனுப்பிய தந்தையின் விருப்பமும் ஆகும். ஆனால் அவருக்கு கிடைத்தது சிலுவை மரணம். எனினும் அவர் அன்பு கட்டளையிட்டு சென்றார். "நான் எதையெல்லாம் செய்தோனோ அவற்றையெல்லாம் நீஙகளும் செய்யுங்கள். அதை மறந்து சுயநலத்திற்காக வாழ்வோர் என்னுடையோர் அல்ல" என சாடுகின்றார். சமூக பிடியிலிருந்து மக்களைக் காத்து பெருமை சேர்த்த மேத்தா பட்கர் போன்றோர்கள் இயேசுவின் கட்டளைக்கு தகுதி பெறுகின்றனர். காரணம் அடிதட்டுமக்களின் முன்னேற்றத்திற்காக அரும் பாடுபட்டவர்கள். இவர்களை சற்று சிந்திப்போம்.

சுயஆய்வு :

  1. இயேசுவின் விருப்பத்தை எந்த நிலையிலும் நிறைவேறுகின்றேனா?
  2. சுயநலம் கருதாமல் பிறர்நலம் பேண என்னுடைய பங்கு என்ன?

இறை வேண்டல்:

மண்ணகம் இறங்கி மானிடரை மீட்ட இயேசுவே! நானும் "நான்" என்ற அகந்தையை விட்டு சமூக மாற்றத்திற்காக அடிதட்டு மக்களை நினைவில் கொண்டு அவர்கள் சுமைகளை சுமந்து செல்லும் வரம் தாரும்.


www.anbinmadal.org