arulvakku

ஜூன், 26

இன்றைய நற்செய்தி:

மத்தேயு 8:1-4

" உடனே அவரது தொழுநோய் நீங்கியது "

அருள்மொழி:

இயேசு தமது கையை நீட்டி அவரைத் தொட்டு, “நான் விரும்புகிறேன், உமது நோய் நீங்குக! “ என்று சொன்னார். உடனே அவரது தொழுநோய் நீங்கியது.
மத்தேயு 8:3

வார்த்தை வாழ்வாக:

இன்றைய நற்செய்தியில் இயேசு தொழுநோயாளியைத் தொட்டுக் குணப்படுத்துகின்றார். ஏனெனில் தொழுநோயாளர்களைக் குணப்படுத்துபவர் வருகையில் ஒருவரை "நான் விரும்புகிறேன். நோய் நீங்குக" என்கின்றார். இங்கே தொட்டுக் குணப்படுத்துகின்றார். இரண்டையும் சற்றுக் கூர்ந்து கவனிபோமானால் சாதரணமாகக் நோயாளிகளைத் தொடுவதற்கு அன்றும் இன்றும் அனேகர் முன் வருவதில்லை. தொற்றி விடுமோ என்ற ஆதங்கம். ஆனால் இவருக்குத் தொட்டுக் குணப்படுத்தி மனதுக்குள் முடங்கிக் கிடந்த தாகத்தைத் தணிக்கின்றார். உன்னையும் நான் நேசிக்கின்றேன். கலங்காதே! என் செயல்களையும் பின்பற்றிப் பலர் நலம் பெறுவார்கள்.

சுயஆய்வு :

  1. நோயாளிகளுக்கு நான் என்ன செய்ய விரும்புகின்றேன்?
  2. நம்பிக்கை எத்தகையது என்பதை அறிகிறேனா?

இறை வேண்டல்:

அன்பு இயேசுவே! உமது வலமையைக் கொண்டு நானும் நின் பணிச் செய்ய வரம் தாரும். ஆமென்.


www.anbinmadal.org