arulvakku

ஜூன், 23

இன்றைய நற்செய்தி:

மத்தேயு 7:6, 12-14

" வாழ்வுக்குச் செல்லும் வாயில் மிகவும் இடுக்கமானது; "

அருள்மொழி:

வாழ்வுக்குச் செல்லும் வாயில் மிகவும் இடுக்கமானது; வழியும் மிகக் குறுகலானது; இதைக் கண்டுபிடிப்போர் சிலரே.
மத்தேயு 7:14

வார்த்தை வாழ்வாக:

இன்றைய நற்செய்தியில், இயேசு, அடுத்தவர் நமக்கு நல்லதைச் செய்ய வேண்டுமென்று எல்லாருமே நினைக்கிறார்கள். அதே வேளையில் நாம் மட்டும் அடுத்தவருக்கு எதையும் செய்ய மனம் முன்வருவதில்லை. இங்கே சுயநலம் மேலோங்கி நிற்பதைக் காண்கின்றோம். தன்னலம் துறந்துப் பொதுநலம் காக்கும்போது, அதாவது அடுத்தவரின் துயரில் பங்கு பெற்று, பிறர் வாழ நம்மாலான உதவியைச் செய்வது பொன் விதியாகும். அதே வேளையில் வலது கைச் செய்வதை இடது கை அறியாதிருக்கட்டும் எனும் விதியும் மிகச் சாலச் சிறந்தது. நாம் செய்யும் உதவியால் வறியோரின் வாழ்வாதாரம் உயர்ந்து நின்றால், இதனைக் காணும் நம் தந்தை நமக்கு மிகுந்த கைம்மாறுக் கொடுப்பார் என்பதே இறைமகனின் ஆன்மத் தாகம். எனவே அனைவரும் இறைவனின் மக்களாவோம். வெல்வோம் இகமதை.

சுயஆய்வு :

  1. நிலைவாழ்வு என்றால் என்ன?
  2. அந்த வாயில்களை நான் கடந்து செல்ல எனது முயற்சி யாது?

இறை வேண்டல்:

அன்பு இயேசுவே, நிலைவாழ்வை நான் அடைய இம்மண்ணக வாழ்வில் உமது சாட்சியாய் வாழ வரம் தாரும். ஆமென்.


www.anbinmadal.org