arulvakku

ஜூன், 22

இன்றைய நற்செய்தி:

மத்தேயு 7:1-5

" “உங்கள் கண்ணிலிருந்து மரக்கட்டையை எடுத்தெறியுங்கள்.." "

அருள்மொழி:

வெளிவேடக்காரரே, முதலில் உங்கள் கண்ணிலிருந்து மரக்கட்டையை எடுத்தெறியுங்கள். அதன்பின் உங்கள் சகோதரர் அல்லது சகோதரியின் கண்ணிலிருந்து துரும்பை எடுக்க உங்களுக்குத் தெளிவாய்க் கண் தெரியும்.
மத்தேயு 7:5

வார்த்தை வாழ்வாக:

வார்த்தை வாழ்வாக இன்றைய நற்செய்தியில், இயேசு, “யாருக்கும் தீர்ப்பு அளிக்காதீர்கள். நாம் அளிக்கும் தீர்ப்பே மீண்டும் நமக்கே அளிக்கப்படும். அவ்வாறே நீங்கள் எந்த அளவையால் அளக்கிறீரோ அதே அளவையால் மீண்டும் உங்களுக்கு அளக்கப்படும். நமது குற்றத்தை முதலில் என்னவென்று அறிந்து தெளிந்து கொண்டு, அடுத்தவர் கண்ணிலிருக்கும் துரும்பை எடுக்க முயற்சி செய்யுங்கள்." நாம் என்ன செய்கின்றோம்? இறை வார்த்தையின்படி வாழ்கின்றோமா? கட்டளைகளைக் கடைப்பிடிக்கின்றோமா என்பதை முதலில் ஆய்வு செய்து, பிறகு அடுத்தவரின் நலன்களைப் பற்றி விசாரித்து உதவி செய்தல் நல்லது. நாம் எதை ஏறெடுத்தாலும் இறை-மனித உறவில் சங்கமித்திருக்க வேண்டும். தூய்மையான இது, அடுத்தவருக்கும் தூய்மையைக் கொடுக்கும் எனும் சிந்தனை நம்மில் உருவான பிறகு அதனைப் பயனுள்ள - அதனை அடையும் தகுதி பெற்றவருக்கே வழங்குதல் நல்லது. மாறாக தூய்மையானதை நாய்களுக்கு அளித்தால், அவற்றுக்கு அதன் மேன்மையை உணரும் வாய்ப்பு இல்லை. எனவே இத்தகைய செயலை மறப்போம்.

சுயஆய்வு :

  1. தூய்மையானது எது என்பதை உய்த்துணருகிறேனா?
  2. ஆறறிவு படைத்தவர்களின் நலன் நாடுகிறேனா?

இறை வேண்டல்:

அன்பு இயேசுவே, தீர்ப்பின்படி இவ்வுலகில் வாழும் பேற்றைத் தாரும். ஆமென்.


www.anbinmadal.org