arulvakku

ஜூன், 21

இன்றைய நற்செய்தி:

மத்தேயு 10:26-33

" அஞ்சவேண்டாம் "

அருள்மொழி:

ஆன்மாவைக் கொல்ல இயலாமல். உடலை மட்டும் கொல்பவர்களுக்கு அஞ்சவேண்டாம். ஆன்மாவையும் உடலையும் நரகத்தில் அழிக்க வல்லவருக்கே அஞ்சுங்கள்.
மத்தேயு 10:28

வார்த்தை வாழ்வாக:

இன்றைய நற்செய்தியில் இயேசு, " அஞ்சாதீர்கள். ஆன்மாவைக் கொல்ல இயலாமல் உடலை மட்டும் கொல்பவருக்கு அஞ்சவேண்டாம்" என்றார். காரணம் இவ்வுலகில் பொருளாசை, காமம், இச்சை, சுயகௌரவம் போன்ற பேராசையின் பொருட்டு அவர்களைக் கொல்லும் நயவஞ்சர்களைக் கண்டு அஞ்சாதீர்கள். ஆன்மாவையும், உடலையும் கொல்பவருக்கே அஞ்சுங்கள் என்று நலாசானாக இறைமகன் எச்சரிக்கின்றார். எனவே இறையரசின் மதிப்பீடுகளை உண்மை - நீதி - நேர்மை- அன்பு -பகிர்வு போன்ற விழுமியங்களை இன்றைய கொரோனாப் படியில் சிக்கியிருக்கும் வேளையில் நாம் கடந்து சென்று வறியோரில் இறைமகன் இயேசுவைக் காண்போம். இன்றைய சூழல் நம்மை இறைமகன் கடந்து வந்த பாதையைச் சுயத் தரிசனம் செய்ய இறைகூவல் விடுகின்றார். தீமைகளைக் கண்டுணர்ந்து மனம் மாறி அடுத்தவரில் இறை- மனித உறவை வளர்ப்போம். வாரீர்

சுயஆய்வு :

  1. அஞ்சாதீர்கள் என்பவரை அறிகிறேனா?
  2. அதன் கருப்பொருளை உணர்ந்து வாழ்கிறேனா?

இறை வேண்டல்:

அன்பு இயேசுவே! ஆன்மாவையும் உடலையும் நரகத்தில் அழிக்க வல்லவருக்கே அஞ்சி நடக்க வரம் தாரும். ஆமென்


www.anbinmadal.org