arulvakku

ஜூன் 20

இன்றைய நற்செய்தி:

மத்தேயு 6:24-34

" "நாளைக்காகக் கவலைப்படாதீர்கள்.அந்தந்த நாளுக்கு அன்றன்றுள்ள தொல்லையே போதும்." "

அருள்மொழி:

ஆகையால் நாளைக்காகக் கவலைப்படாதீர்கள். ஏனெனில் நாளையக் கவலையைப் போக்க நாளை வழி பிறக்கும். அந்தந்த நாளுக்கு அன்றன்றுள்ள தொல்லையே போதும்.
மத்தேயு 6:34

வார்த்தை வாழ்வாக:

இன்றைய நற்செய்தியில் இயேசு, எதை உண்போம்? எதைக் குடிப்போம்? எதை உடுத்துவோம்? என்ற கவலை இனி வேண்டாம். மானிடரைப் படைத்த உம் தந்தைக்குத் தெரியும். எந்த நேரத்தில் தம் மக்களுக்குக் கொடுக்க வேண்டும் என்று.. எனவே எதற்காகவும் கலங்க வேண்டாம். நாம் நாளைய பற்றிய கவலைக் கொள்ளும் போது நம்மால் நமது உயரத்தை ஒரு முழும் கூட்ட முடியமா? அல்லது குறைக்கதான் முடீயுமா? வானத்துப்பறவைகளையும் - மலர்களையும் - விலங்குகளையும் படைத்துப் பராமரித்து வரும் இறைவன் தன் சாயலாகப் படைத்த நமக்க எத்தகைய கைம்மாறு அளித்துப் பாதுகாக்கின்றார். என்ற நல் சிந்தனைகளை மனதில் பதித்து நம்பிக்கையோடு இறைவார்த்தையில் ஊன்றி இந்த உலகை வலம் வருவோம் உடன் இயேசு பயணிக்கின்றார்.

சுயஆய்வு :

  1. நாளைய கவலை உனக்கு உள்ளதா?
  2. இன்று உள்ளத் தொல்லை என என்பதை உணர்கிறேனா?

இறை வேண்டல்:

அன்பு இயேசுவே! உமது உடனிருப்பில் நான் வாழ்ந்திடும் வரம் தாரும். ஆமென்.


www.anbinmadal.org