arulvakku

ஜூன், 19

இன்றைய நற்செய்தி:

மத்தேயு 11:25-30

" ஆம், என் நுகம் அழுத்தாது; என் சுமை எளிதாயுள்ளது "

அருள்மொழி:

"ஆம், என் நுகம் அழுத்தாது; என் சுமை எளிதாயுள்ளது" என்றார்
மத்தேயு 11:30

வார்த்தை வாழ்வாக:

இன்றைய நற்செய்தயில் இயேசு சுமைச் சுமந்துச் சோர்ந்திருப்போரே எல்லாரும் என்னிடம் வாருங்கள். உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேனென்று தன் இரு கரங்களையும் இதயத்தையும் திறந்து அழைப்பு விடுக்கின்றார். ஆம், என் நுகம் அழுத்தாது; என் சுமை எளிதாயுள்ளது" என்று கருணையின் தேவன் நமக்கு அழைப்பு விடுக்கின்றார். இதே இரக்கத்தின் ஏழை எளியோரில் நாமும் பதிவு செய்வோம். இகமதை வெல்வோம். நிலைவாழ்வவிற்கு அடிதளமிடுவோம். நாம் வாழும் இவ்வுலகம் பல சமயங்கள் - இனங்கள் - மொழிகளைக் கொண்டது. என்றாலும் அகைத்தும் நம் இறைவன்முன் ஒன்றே! என்ற மறையுண்மையை உணர்ந்து வாழ்வோம். திரு இதயம் நமக்கு உணர்த்தும் இறை இரக்கம் நம்மில் பெருக்கெடுத்து வறியோரை நோக்கிப் பயணிக்கட்டும்.

சுயஆய்வு :

  1. என் நுகம் அழுத்தாது என்பதின் பொருள் யாது?
  2. திருஇதயத்தை எனதாக்கிட என் முயற்சி யாது?

இறை வேண்டல்:

அன்பு இயேசுவே! உம் சுமையில் நான் நனைந்திடும் வரம் தாரும். ஆமென்


www.anbinmadal.org