arulvakku

ஜூன், 14

இன்றைய நற்செய்தி:

யோவான் 6: 51-58

"எனது சதையை உண்டு என் இரத்தத்தைக் குடிப்பவர் நிலைவாழ்வைக் கொண்டுள்ளார் "

அருள்மொழி:

எனது சதையை உண்டு என் இரத்தத்தைக் குடிப்பவர் நிலைவாழ்வைக் கொண்டுள்ளார். நானும் அவரை இறுதி நாளில் உயிர்த்தெழச் செய்வேன்.
யோவான் 6:54

வார்த்தை வாழ்வாக:

இன்றைய நற்செய்தியில் இயேசு "எனது சதையை உண்டு என் இரத்தத்தைக் குடிப்பவர் நிலைவாழ்வைக் கொண்டுள்ளார். நானும் அவரை இறுதி நாளில் உயிர்த்தெழச் செய்வேன். " என்கிறார். மானிடமகன் விண்ணிலிருந்து இறங்கி வந்த உயிருள்ள வாழ்வைத் தரும் உணவு நானே!! என்கிறார். அன்பர்களே! தந்தை படைத்த மனுகுலம் இறைவார்த்தையின்படி வாழாமல் மனம்போனபோக்கில் வாழும்போது தான் தன் ஒரே மகனை அன்னை மரியின் வழியாக தந்தார். அவரே இறைமகன் என்று ஏற்காத சூழலில் தான் இறப்பு -உயிர்ப்பு எனும் அருங்செயல்கள் நடந்தேறியது. மீண்டும் தான் தன் தந்தையிடம் செல்லும்போது நமக்கு என்றும் அழியாத நிலைவாழ்வை அளிக்கும் உணவை விட்டு சென்றார். அதுவே கிறிஸ்துவின் திருவுடல் திரு இரத்தம். உலகம் முடியும் வரை எந்நாளும் உங்களோடிருப்பேன் என்றவர் நற்கருணை என்னும் அருட்சாதனத்தில் தன்னை முழுமையாக உலக மாந்தருக்காக விட்டு சென்றார். இது தான் தேவ நற்கருணை எனும் அருட்சாதனத்தை இறைமகன் உண்டாக்கினார். இதனை தகுந்த ஆயத்தத்தோடு நாம் உண்போமாகில் என்றும் அழியா நிலைவாழ்வை நாம் பெறுவோம் என்பதே இதன் கருப்பொருளாகும்.

சுயஆய்வு :

  1. நற்கருணை என்றால் என்ன?
  2. இதனை பெற எனது தகுதி யாது?

இறை வேண்டல்:

அன்பு இயேசுவே! நிலைவாழ்வை அடைய நான் உம்மை உணர்ந்து வாழ வரம் தாரும். ஆமென்.


www.anbinmadal.org