arulvakku

ஜூன் 13

இன்றைய நற்செய்தி:
புனித அந்தோணியார் விழா

மத்தேயு 5:33-37

" "உங்கள் ஒளி மனிதர்முன் ஒளிர்க!" "

அருள்மொழி:

இவ்வாறே உங்கள் ஒளி மனிதர்முன் ஒளிர்க! அப்பொழுது அவர்கள் உங்கள் நற்செயல்களைக் கண்டு உங்கள் விண்ணகத் தந்தையைப் போற்றிப் புகழ்வார்கள்.
மத்தேயு 5:16

வார்த்தை வாழ்வாக:

இன்றைய நற்செய்தியில் இயேசுவின் இரக்கச் செயல்களை மண்ணக மாந்தரில் உங்கள் ஒளி ஒளிர்வதாக என்று கூறியவாறே பதுவா அந்தோணியார் இறைமகன் விட்டுச் சென்ற அறச்செயல்களைச் செய்து இன்றும் என்றும் மக்களால் போற்றப்படும் புனித அந்தோணியார் விழாவைக் கொண்டாடி மகிழ்கின்றோம். அவர் லிஸ்பனில் பிறந்தாலும் அனைத்துச் சாதி -இனம் - சமயம் கடந்து பல புதுமைகள் ஆற்றிக் கிறிஸ்துவின் மதிப்பீடுகளை இவ்வுலகறியச் செய்தவர். இப்புனிதர் 36 ஆண்டுகளே இவ்வுலகில் வாழ்நதாலும் நீங்கா இடம் பெற்றும் அழியா நாவிவைக் கொண்டு மண்ணின் மாந்தர்களின் இதயங்களில் வலம் வருகின்றார் என்பதை மனதில் பதிவு செய்வோம். புனிதரின் ஒளி மக்கள் முன்பு ஒளிர்கின்றது.

சுயஆய்வு :

  1. அன்பொளி மக்கள் முன் ஒளி ஒளிர்கிறதா?
  2. புனிதரின் மனம் கொள்ள என் முயற்சி யாது?

இறை வேண்டல்:

அன்பு இயேசுவே! நீர் மழலையாக புனிதரின் கரங்களில் தவழ்ந்தீர் என்பதை நானும் சுவைக்கும் வரம் வேண்டி நிற்கின்றேன். ஆமென்.


www.anbinmadal.org