arulvakku

ஜூன், 8

இன்றைய நற்செய்தி:

மத்தேயு 5:1-12

""என் பொருட்டு உங்களைப் பற்றி இல்லாதவை பொல்லாதவையெல்லாம் சொல்லும்போது நீங்கள் பேறுபெற்றவர்களே!." "

அருள்மொழி:

மகிழ்ந்து பேருவகை கொள்ளுங்கள்! ஏனெனில் விண்ணுலகில் உங்களுக்குக் கிடைக்கும் கைம்மாறு மிகுதியாகும். இவ்வாறே உங்களுக்கு முன்னிருந்த இறைவாக்கினர்களையும் அவர்கள் துன்புறுத்தினார்கள்.
மத்தேயு 5:12

வார்த்தை வாழ்வாக:

இன்றைய நற்செய்தியில் இயேசு நாம் எத்தகைய மனநிலையோடு இவ்வுலகில் வாழ வேண்டும் என்பதற்கு நல்ஆசானாக மலைப்பொழிவைக் கொடுத்து நம் ஒவ்வொருவரையும் இறை- மனித உறவில் நாளும் சங்கமித்து வாழ்ந்திட ஊக்கமளிக்கின்றார். எனவே நாம் வாழும் சமுதாயத்தில் நீதி, நேர்மை, அன்பு, பகிர்வு, சமத்துவம், சகோதரத்துவம் போன்ற இறையரசு விழுமியங்களை வாழ்வாக்கிடும்போது மக்கள் இல்லாதது பொல்லாதது சொல்லி நம்மை அவமானப்படுத்துவார்கள். அதன் பொருட்டு நீங்கள் மகிழ்ந்து களிகூறுங்கள். ஏனெனில் அதற்கான கைம்மாறு நம் தந்தையாகிய இறைவன் விண்ணுலகில் கொடுப்பார் என்பதே இந்த மலைப்பொழிவின் நோக்கம் அதனை உள்வாங்கிச் செயல்படுத்துவோம்

சுயஆய்வு :

  1. நீதியினிமித்தம் என் செயல்கள் யாது?
  2. சமத்துவம் உணர்த்தும் செய்தி யாது?

இறை வேண்டல்:

அன்பு இயேசுவே! உம் விழுமியங்களின் பொருட்டு என்ன நேர்ந்தாலும் தாங்கி கொள்ளும் வரம் தாரும். ஆமென்


www.anbinmadal.org