arulvakku

ஜூன், 7
மூவொரு கடவுள் பெருவிழா

இன்றைய நற்செய்தி:

யோவான் 3:16-18

" உலகிற்குத் தண்டனைத் தீர்ப்பு அளின்ன அல்ல -மாறாக மீட்கவே அனுப்பினார். "

அருள்மொழி:

உலகிற்குத் தண்டனைத் தீர்ப்பு அளின்ன அல்ல -மாறாக மீட்கவே அனுப்பினார்.
யோவான் 3:17

வார்த்தை வாழ்வாக:

இன்றைய நற்செய்தியில் இயேசு இவ்வுலகிற்கு மீட்பு வழங்கவே தந்தையாகிய இறைவன் அனுப்புகின்றார். நன்மை எது? தீமை எது? என்று உணராத மானிடரை இறையாண்மையில் ஊன்றச் செய்து பாவத்தின் பிடியிலிருந்து மீட்கவே தன் மகனை அனுப்புகின்றார். இன்று மூவொரு இறைவனின் திருவிழானை நாம் கொண்டாடி மகிழ்கின்றோம்! தந்தை -படைத்தவர் -மகன்- உலகை மீட்டவர் - தூயஆவி -உலகைப் பராமரிப்பவராக என்றென்றும் உலகை இயங்கச் செய்கிறார். மூவரும் ஓரேபாதையில் உலக மாந்தருக்காகப் பயணிக்கின்றனர் என்பதை, ஓரே கடவுள் தன் பணியை எவ்வாறு செயல்படுத்துகின்றார் என்பதை நாம் உணர்ந்திடுவோம். மூவொரு இறைவனினல் இணைந்திருபோம். உலகு மானிடருக்காகப் படைக்கப்பட்டத. இறைமகன் மானிடரின் மீட்புக்காக மண்ணகம் வந்து இறங்கினார். தண்டனைத் தீர்ப்பு வழங்க அல்ல மாறாக மானிடரை இறையரசில் இணைந்திடவே மூவொரு இறைவன் இவ்வுலகை வலம் வருகின்றார் என உணர்வோம்.

சுயஆய்வு :

  1. மூவொரு இறைவனை அறிகிறேனா?
  2. இறைமகன் வருகை எத்தகையோருக்கு என்பதை அறிகிறேனா?

இறை வேண்டல்:

அன்பு இயேசுவே! உமது மதிப்பீடுகள் என் வாழ்வின் நங்கூரமாகிடும் வரம் தாரும். ஆமென்.


www.anbinmadal.org