arulvakku

ஜூன்,1

இன்றைய நற்செய்தி:

மாற்கு 12:1-12

" அவர் அவருடைய அன்பு மகன்! "

அருள்மொழி:

இன்னும் எஞ்சியிருந்தவர் ஒருவரே. அவர் அவருடைய அன்பு மகன்!
மாற்கு 12 : 6

வார்த்தை வாழ்வாக:

இந்த நற்செய்தியில் திராட்சைத் தோட்ட உவமையின் மூலமாக ஆண்டவர் அனுப்பிய நீதி தலைவர்களையும் இறைவாக்கினர்களையும் இஸ்ரயேல் மக்கள் நடத்திய விதத்தை மறைமுகமாக விளக்குகின்றார். எஞ்சியிருந்த தான் ஒரே மகனை என்ன செய்யப் போகிறார்கள் என்பதாகும். ஆனால் விண்ணக வாழ்வின் வழியுமாகிய இயேசுகிறிஸ்து இஸ்ரயேல் மக்களிடம் சென்று இறையரசை அறிவித்தார். அதைதான் இயேசு 'கட்டுவோர் புறக்கணித்த கல்லே கட்டடத்துக்கு மூலக்கல் ஆயிற்று. ஆண்டவரால் நிகழ்ந்துள்ள இது நம் கண்களுக்கு வியப்பாற்று." மாற்கு 12:10-11 என்று கூறுகிறார். எனவே நாம் இன்றயை நிலையில் என்னவாக இருக்கின்றோம்? அயலானை அன்புச் செய்கிறோமா? அல்லது தீய செயல்களுக்குத் துணைப் போகின்றோமா? நமது செயல்களுக்கு ஒரு நாள் முடிவு உண்டு மறவாதீர்.

சுயஆய்வு :

  1. ஆண்டவர் பார்வையில் நல்லவனாக வாழ்கின்றேனா?
  2. மூலைக்கல்லாகிய இயேசுவை என் வாழ்வில் தடம் பதிப்பேனா?

இறை வேண்டல்:

என் இயேசுவே இவ்வுலகில் வாழ்கின்ற காலங்களில் இறைபிரசன்னத்தில் வாழும் அருளினைத் தர உம்மை இறைஞ்சுகின்றோம். ஆமென்.


www.anbinmadal.org