ஜூன், 21 - வியாழன்
இன்றைய நற்செய்தி:

மத்தேயு. 6:7-15

"பிறர் குற்றத்தை மன்னிக்காவிடில், உங்கள் தந்தையும் உங்கள் குற்றத்தை மன்னிக்க மாட்டார்.”

அருள்மொழி:

பின்பு அவர்கள் தொழுகைக் கூடத்தை விட்டு வெளியே வந்து யாக்கோபு, யோவானுடன் சீமோன், அந்திரேயா ஆகியோரின் வீட்டிற்குள் சென்றார்கள்.
மாற்கு 9:29

வார்த்தை வாழ்வாக:

இன்றைய நற்செய்தியில், இயேசு, நாம் எவ்வாறு செபிக்க வேண்டும், எவ்வாறு வாழ வேண்டும் என்று நல் ஆசானாக தாமே கற்றுத் தந்த செபத்தின் வாயிலாக ஞான அறிவுரை வழங்குகின்றார். நாம் நம்மைப் படைத்த இறைவனை நாளும் போற்றிப் புகழவும், இறைத்திட்டம் விண்ணுலகில் எவ்வாறு நிறைவேறுகின்றதோ, அவ்வாறே மண்ணுலகிலும் நிறைவேறிட நாமும் இறை அச்சம் கொண்டவர்களாக வாழ வேண்டும் என்பதே அவரது திட்டம். அவ்வாறே மண்ணுலகில் நமக்குத் தேவையான ஆன்ம உணவு-உடல் உணவு தாரும். நமக்கு எதிராக எவராவது குற்றம் செய்தால் அவர்களை மன்னித்து ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதே இறைமகனின் வேட்கை. எனவேதான் நாம் எப்படி வாழ வேண்டும் என்று நமக்கு வலியுறுத்துகின்றார்.

சுயஆய்வு :

  1. குற்றம் என்றால் என்ன என்று உணர்கின்றேனா?
  2. குற்றத்தை மன்னிக்கும் மனம் கொண்டுள்ளேனா?

இறை வேண்டல்:

அன்பு இயேசுவே, நான் வாழும் இடங்களில் எனக்கெதிராகக் குற்றம் செய்யும்போது, அதை மன்னித்து அவர்களை ஏற்றுக் கொள்ளும் மனம் தாரும். ஆமென்.www.anbinmadal.org