ஜூன், 19 - செவ்வாய்
இன்றைய நற்செய்தி:

மத்தேயு 5:43-48

"உங்கள் விண்ணகத் தந்தை நிறைவுள்ளவராய் இருப்பது போல நீங்களும் நிறைவுள்ளவராய் இருங்கள்.”

அருள்மொழி:

ஆதலால், உங்கள் விண்ணகத் தந்தை நிறைவுள்ளவராய் இருப்பது போல நீங்களும் நிறைவுள்ளவர்களாய் இருங்கள்
மத்தேயு 5:48

வார்த்தை வாழ்வாக:

இன்றைய நற்செய்தியில், இயேசு, பகைவரிடம் அன்பாயிருங்கள் என்று கூறுகின்றார். நம்மைத் துன்புறுத்துவோருக்காக இறைவனிடம் வேண்டுங்கள். இப்படி நாம் செபிக்கும்போது தந்தையின் மக்கள் ஆவோம். ஆனால் விண்ணகத் தந்தை கதிரவனைத் தீயோர் மீதும் நல்லோர் மீதும் உதிக்கச் செய்கின்றார். நேர்மையாளர் மீதும் மழையைப் பெய்யச் செய்கின்றார். காரணம், தந்தை அனைவருக்கும் கடவுளாகின்றார். இங்கே தந்தையின் இரக்கப்படி நாமும் மனம் மாறி நற்செய்தியை நம்புவோம். இறையரசில் அனைவரையும் கொண்டு சேர்ப்போம். ஏனெனில் நம் விண்ணகத் தந்தை நிறைவுள்ளவராய் இருப்பது போல நாமும் நிறைவுள்ளவர்களாக வாழ்வோம்.

சுயஆய்வு :

  1. பகைவரிடம் அன்பாயிருக்கின்றேனா?
  2. நான் நிறைவுள்ளவராக இருக்க என் முயற்சி யாது?

இறை வேண்டல்:

அன்பு இயேசுவே, உமது வார்த்தை என் வாழ்வின் வசந்தமாகிடும் வரம் தாரும். ஆமென்.


www.anbinmadal.org