ஜூன், 18 - திங்கள்
இன்றைய நற்செய்தி:

மத்தேயு 5:38-42

"உங்களிடம் கேட்கிறவர்களுக்குக் கொடுங்கள். கடன் வாங்குபவர்களுக்கு முகம் கோணாதீர்கள்.”

அருள்மொழி:

உங்களிடம் கேட்கிறவருக்குக் கொடுங்கள்; கடன் வாங்க விரும்புகிறவருக்கு முகம் கோணாதீர்கள்.
மத்தேயு 5:42

வார்த்தை வாழ்வாக:

இன்றைய நற்செய்தியில், இயேசு, பழி வாங்கும் எண்ணம் கூடாது என்று நல் ஆசானாகப் பதிவு செய்கின்றார். “கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல்” எனும் பழைய நிலைகளை மறந்து விடுங்கள். உங்களை எவரேனும் அடிக்க வந்தால், ஏற்றுக் கொள்ளுங்கள். உங்கள் மீது இல்லாதது பொல்லாதது சொல்லும்போது ஏற்றுக் கொள்ளுங்கள். மறைவாகக் காணும் உம் தந்தை உமக்குக் கைம்மாறு கொடுப்பார். பழிக்குப் பழி எனும் சிந்தனைகளை ஒதுக்கி விடுங்கள். இவற்றுக்குக் கைம்மாறு கிடைக்கும் என்று இறைமகன் மண்ணுலக வாழ்வின் பல நிலைகளைச் சுட்டிக்காட்டி, நாம் எப்படி வாழ வேண்டும் என்று கூறுகிறார்.

சுயஆய்வு :

  1. என்னிடம் கேட்கிறவர்களுக்குக் கொடுக்கிறேனா?
  2. இவ்வுலக வாழ்வில் நான் காணும் சவால்களை அறிகிறேனா?

இறை வேண்டல்:

அன்பு இயேசுவே, என்னிடம் கேட்கிறவர்களுக்கு மனம் கோணாமல் வழங்கும் வரம் தாரும். ஆமென்.


www.anbinmadal.org