ஜூன், 17 - ஞாயிறு
இன்றைய நற்செய்தி:

மாற்கு 4; 26-34

"உவமைகளின்றி அவர் அவர்களோடு பேசவில்லை. ஆனால் தனிமையாக இருந்தபோது அனைத்தையும் விளக்கினார்."

அருள்மொழி:

உவமைகள் இன்றி அவர் அவர்களோடு பேசவில்லை. ஆனால் தனிமையாக இருந்தபோது தம் சீடருக்கு அனைத்தையும் விளக்கிச் சொன்னார். மாற்கு 4:34
மாற்கு 4:34

வார்த்தை வாழ்வாக:

இன்றைய நற்செய்தியில், இயேசு, விதை உவமை, கடுகு விதை உவமை வாயிலாகவே இறையாட்சியைப் பற்றி பதிவு செய்கின்றார். தானாக விளைந்த விதை இறைஞானத்தில் உதித்து அதன் தாக்கத்தால் வளர்ந்து அடுத்தவருக்கும் அருமருந்தாகி, இறைவாக்கை வளப்படுத்துகின்றது. கடுகு விதை சிறியதாக இருப்பது போல, நாம் செய்யும் அறச்செயல்கள் சிறிதாக இருப்பினும் தந்தையின் பார்வையில் பலுகிப் பெருகி, அனைவரையும் ஒன்றிணைக்கும் அருமருந்தாகின்றது எனும் இறைவேட்கையை உவமைகளின் வாயிலாகப் பேசிய இறைமகன், தம் சீடர்களுக்குத் தனியாக இருந்த வேளையில் அனைத்தையும் எடுத்துரைக்கின்றார். அவர்களும் இறைமகனின் வார்த்தையைக் கேட்டு அதற்கேற்ப இறையரசைக் கட்டி எழுப்பினார்கள்.

சுயஆய்வு :

  1. உவமைகள் உரைத்த செய்தி யாது?
  2. தனிமையில் பேசிய இறைமகனின் விளக்கம் அறிகிறேனா?

இறை வேண்டல்:

அன்பு இயேசுவே, உமது உவமைகள் தரும் போதனைகள் என் வாழ்வின் ஊற்றாகிடும் வரம் தாரும். ஆமென்.


www.anbinmadal.org